திங்கள், 12 செப்டம்பர், 2011

சட்டம், தர்மம், நியாயம்!- துக்ளக் -


rajiv-mdராஜீவ் காந்தி கொலை வழக்கில், இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் மூவர் Rajiv-Gandhi_0(ஒருவருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது), செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள்’ என்ற செய்தி வெளியானதிலிருந்து, அந்த மூவரைக் காப்பாற்ற பல முயற்சிகள், பல தரப்புகளில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மூவரே கூட, தங்களுடைய கருணை மனு ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு, சென்னை ஹைகோர்ட்டை அணுகி, தூக்கு தண்டனைக்குத் தடை உத்திரவைப் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் – புலி ஆதரவாளர்கள்; சட்ட வல்லுனர்கள்; இவ்விஷயத்தில் மென்மை காட்டுவது ஓட்டைப் பெற்றுத் தரும் என்று நினைப்பவர்கள்; விளம்பரப் பிரியர்கள்; மனிதாபிமானிகள்; பத்திரிகையாளர்கள்; அறிவுஜீவிகள்; மரண தண்டனையை எதிர்ப்பவர்கள்... என்று பலர், பல்வேறு வகைகளில், இந்த மூவருக்காக வாதாடி வருகின்றனர். இப்படி இந்த மூவர் சார்பாக கூறப்படுகிற வாதங்களை, கேள்விகள் உருவில் இங்கு பார்ப்போம்.

விடுதலைப் புலிகள், தாங்களாகவே குற்றம் சுமத்தி, தாங்களாகவே விசாரித்து, தாங்களாகவே தீர்ப்பு வழங்கி, தாங்களாகவே பல அப்பாவித் தமிழர்களை, துரோகிகள் என்று பட்டம் கட்டி, விளக்குக் கம்பங்களில் தூக்கிலிட்டு வந்தார்களே - அது போன்றதல்ல நமது நாட்டு நீதி நிர்வாகம். முறையான விசாரணை; முறையான வழக்கு; முறையான தீர்ப்பு; அந்தத் தீர்ப்பு மீண்டும் இரண்டு முறை பரிசீலனை... என்ற கட்டங்கள் கடக்கப்பட்டன. அதில் எந்த ஒரு கட்டத்திலும் இவர்கள் நிரபராதிகள் என்று நிரூபணம் ஆகவில்லை....

மூவர் தரப்பு வாதங்களின் மையக் கருத்துக்களைக் கேள்விகளாக்கி – நமது கருத்தை பதில்களாகத் தருகிறோம் (மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக