புதன், 28 செப்டம்பர், 2011

தனித்து நிற்போம், தன்மானம் காப்போம் அட்ரஸ் இல்லாமல் போவோம்


தனித்து நிற்போம், தன்மானம் காப்போம் என்ற ஈவிகேஎஸ், யுவராஜா மீது நெல்லை காங்கிரசார் கடும் அதிருப்தி!


நெல்லை மாவட்டத்தில் மாநகர மேயர் தவிர மற்ற பகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பும், வேட்பாளர் பற்றிய அறிவிப்பும் காங்கிரஸ் மட்டத்தில் காலதாமம் ஏற்படுது சகஜமானது தான்.
தற்போது வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு இரு தினங்கள் இருக்கின்றன. இந்த நிலையில்கூட பட்டியல் வெளியாகாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் நெல்லை காங்கிரசார்.
(இளங்கோவனும் யுவராஜும் சும்மா சவடால் அரசியல் பேசிய வெத்து வேட்டுகளாகும் இந்த இரு செல்லாகாசுகளும் தனியாக நிற்க வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. ஒசிச்சவாரி செய்தே காலத்தை ஓட்டிடலாம் என்று பார்தால் அய்யாவும் அம்மாவும் ஒரே அடியாக பேதிகுளிசை கொடுதிட்டாங்களே.  )நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட 73 பேரும், மற்ற பதவிகளுக்கு போட்டியிட கிழக்கு மாவட்ட பகுதியில் 385 பேர்களும், மேற்கு மாவட்டத்தில் 285 பேர் மட்டுமே விருப்பமனு அளித்திருந்தனர்.விருப்ப மனு குறைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டி என்ற அறிவிப்பு தான் என்கிறார்கள் நெல்லை காங்கிரசார். மேலும் விருப்ப மனு கொடுத்த அனைவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் 43வது வார்டு, தட்சை மண்டலத்தில் இரு வார்டுகளில் நிற்கவே காங்கிரசார் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே போட்டியிட்டு கவுன்சிலராக பதவில் இருந்த ஜிந்தா சுப்பிரமணி, உமாபதி போன்றவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கவில்லை.
நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் ஏரிவான ராதாபுரம், ஆலங்குளம், வாசுதேவ நல்லூர் போன்ற பகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் அதிக ஆர்வம் இருக்கும். இந்த முறை அந்தப் பகுதிகளில் குறைவான நபர்களே விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பாக கூடங்குளம் பகுதியில் அனுமின் நிலையத்துக்கு எதிராக நடந்த உண்ணாவிரதம் காரணமாக இந்த முறை பலர் தயக்கம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட்டணியின்றி தனித்து போட்டி என்று காங்கிரஸ் அறிவித்தது தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள் நெல்லை காங்கிரசார்.
தனித்து நிற்போம், தன்மானம் காற்போம் என்ற குரல் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மீது கடும் அதிருப்தியிர் இருக்கின்றனர் நெல்லை காங்கிரசார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக