புதன், 21 செப்டம்பர், 2011

சிறையில் கட்சியினரை சந்தித்த அழகிரி

திருநெல்வேலி: பாளை., மத்திய சிறையில் உள்ள கட்சியினரை, மத்திய அமைச்சர் அழகிரி நேற்று சந்தித்தார். பகல் 12.55 மணிக்கு, பாளை சிறைக்கு காரில் வந்த அழகிரி, வெளிவாசலில் நிறுத்தப்பட்டார். அங்கிருந்து நடந்தே சிறைக்குள் சென்றார். "பொட்டு' சுரேஷ், பூண்டி கலைவாணன், மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே.குருசாமி ஆகியோரை சந்தித்தார். ஜெயிலர் கிருஷ்ணகுமார் அறையில் சந்திப்பு நடந்தது. "சிறையில் குடிநீர் கூட சரியாக கிடைப்பதில்லை, மின்சார தடையால் இரவில் தூக்கம் இல்லை. உடல்நிலை பாதிக்கப்படுகிறது' என, அழகிரியிடம் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்களிடம்,"உங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்' என்றார் அழகிரி.
பகல் 1.25 மணிக்கு கிளம்பிச் சென்றார். பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டார். சிறையில் செவ்வாய்க் கிழமைகளில் குண்டர் தடுப்புச் சட்ட கைதிகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மூவரை சந்தித்த அழகிரி, நில மோசடி வழக்கில் விசாரணைக் கைதியாக இருக்கும், நெல்லை மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியனை சந்திக்கவில்லை. இருப்பினும், அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக சிறையிலிருக்கும் கட்சியினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக