திங்கள், 26 செப்டம்பர், 2011

இரு புலிகளை அமெரிக்க காட்டி கொடுத்தது



கனடா சென்றவர்களுள் இருவர் புலிகள்: காட்டிக் கொடுத்தது அமெரிக்கா
கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் காணப்படுவதாக கனடா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களின் முன்பு ஓஷியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 76 இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போதே இந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.


தகவல் கோர்ப்பின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்த போது இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார்.

மேலும், கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒட்டாவாவில் உள்ள அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து கைவிரல் அடையாளங்களைப் பயன்படுத்தி குறித்த இரு சந்தேக நபர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 2008ம் ஆண்டு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் அதன்போது இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் அமெரிக்க பாதுகாப்பு துறையினருக்கும் கனேடிய எல்லைப் பாதுகாப்பினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவமானது நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க தீவரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக