திங்கள், 26 செப்டம்பர், 2011

வாச்சாந்தி பாலியல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!


தருமபுரி மாவட்டம், அரூர் பக்கம் உள்ள, சின்ன கல்வராயன் மலையில் இருக்கும் வாச்சாத்தி என்ற மலை கிராமத்தில் குடியிருக்கும் மலைவாழ் மக்கள், சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாகவும், காடுகளில் வெட்டப்பட்ட மரங்கள் அவர்களின் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் சந்தேகப்பட்ட வனத்துறை அதிகாரிகள், மலைவாழ் மக்களின் வீடுகளில் சோதனை நடத்தவும், அவர்களை கைது செய்யும் நோக்கத்தோடும் 20.6.1992 அன்று மிகப்பெரிய படையோடு வாச்சாத்தி கிராமத்தை சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.
இந்த சம்பவத்தின் போது மலைவாழ் பெண்களை பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் வனத்துரையை சார்ந்த 269 அலுவலர்கள், மற்றும்  உழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, மத்திய புலணாய்வு துறையால் (சி.பி.ஐ) வழக்கு தொடரப்பட்டு, 06.02.2002 அன்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் விசாரணை துவங்கியது.

ஆவணங்கள் தமிழில் வேண்டும், என்னை வழக்கிலிருந்து நீக்குங்கள் என்று வழக்கை காலதாமதப்படுத்தும் நோக்கத்தில், தேவையில்லாமல் தொடரப்பட்ட வழக்குகளின் தொந்தரவால் வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வந்தது.
அடுத்த, ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 22ம் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி விசாரணை தொடங்கியது.
மத்திய புலணாய்வு துறையால் 75 சாட்சிகள், 324 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்லிருந்த நிலையில் வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் வழக்குரைஞர்கள் வாதம். நீதிபதி குமரகுரு முன்னிலையில் துவங்கியது.
இந்த வழக்கில் இன்று (26.09.2011) தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 29.09.2011 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தருமபுரி நீதிமன்றம் ஒத்திவைத்தது..
PHOTO: N. BASHKARAN

Seeking justice: Residents of Vachathi village staging a demonstration in front of the Dharmapuri Collectorate on Monday. —
Dharmapuri: Tribals of Vachathi staged a demonstration in front of the Collectorate here on Monday demanding that the State Government ensure proper distribution of monetary relief announced for victims of police excesses. They also demanded speedy trial in the Vachathi case in Harur taluk in Dharmapuri district.
A total of 269 persons, including 155 forest, 108 police and six revenue department officials, have been charged with offences ranging from rioting to rape against the people of Vachathi village. Though the incident occurred in 1992, the Government was providing interim relief to the victims only in phases. The Government should ensure that there was no interference from officials and handover the relief directly to the victims, they added. Harur MLA P. Dilli Babu led the protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக