வடபகுதியில் வெளிநாடு போவதற்காக தவறான வழிமுறைகளை சிலர் கையாளுகிறார்கள்.
ஏற்கனவே ஒருவரை பதிவு திருமணம் செய்து விட்டு வெளிநாட்டில் உள்ள வேறு ஒரு மாப்பிளையிடம் பெண்ணை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்வேளையில் தில்லுமுல்லு அம்பலமானது. பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இரகசியமாகத் திருமணப்பதிவு இடம்பெற்றமை தெரியவந்ததுள்ளது.
அதனை அறிந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடித்த பெண் வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் போக முயற்சி பிடிபட்டது
மணமகனின் பெற்றோருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து விவாகப் பதிவாளரிடம் விசாரித்த போது திருமணப் பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அத்துடன் விவாகப் பதிவாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெண்ணின் பெற்றோரும் நிற்பதைக் கண்டு மணமகனின் பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக