வியாழன், 1 செப்டம்பர், 2011

ஹசாரே மீது சசிதரூர் தாக்கு மக்களுக்குச் செய்யும் தீங்கு :


சமூக சேவகர் அண்ணா ஹசாரே மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் சசி தரூர். உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த நாள் முதல் காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்களின் கடும் விமரிசனங்களுக்கு உள்ளாகியுள்ளார் அண்ணா ஹசாரே.

அவர் மீது தொடுக்கப்பட்ட சமீபத்திய வார்த்தைத் தாக்குதல், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் இருந்து வந்துள்ளது.

தேர்தலையே சந்திக்காத ஒருவர், எப்படி தன்னை மக்களின் குரல் என்று சொல்லிக்கொள்ளலாம்? என்பதுதான் அந்தத் தாக்குதல்!
சட்டம் என்பது நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படுவது என்று கூறிய சசிதரூர், தேர்தல்களில் நிற்காத ஒரு சிறு குழு, தன் கருத்துகளை சட்டமாகப் போடுமாறு நாடாளுமன்றத்தை வலியுறுத்துவது மக்களுக்குச் செய்யும் தீங்கு என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மைதானத்தில் நின்று கொண்டு, ஒரு சில மக்கள் சூழ்ந்துகொள்ள, சில தொலைக்காட்சி கேமராக்கள் புடைசூழ நின்று கொண்டு குரல் கொடுப்பதெல்லாம் ஜனநாயகம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேற்று இரவு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் காட்டமாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக