புதன், 14 செப்டம்பர், 2011

நல்லூர் திருவிழாவில் காணமல் போன சிறுமி மீட்பு

யாழ். நல்லூர் கடந்த 29ம் திகதி நல்லூர் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்திற்க்குச் சென்றிருந்த போது காணாமல் போன இருபாலையைச் சேர்ந்த சிறுமி நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 29ம் திகதி நல்லூர் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்திற்க்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு மற்றும் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாதாரண பிள்ளைகளைப் போன்று இல்லாமல் உடல் வளர்ச்சி குறைந்த மேற்படி சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் கோப்பாய் தெற்கு பேச்சியம்மன் கோவிலடியில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

சிறுமியின் கையில் அவளது வீட்டின் விலாசத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுமியை வீதியால் சென்றவர்கள் கண்டு வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர். இச்சம்பவம் கோப்பாய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக