செவ்வாய், 6 செப்டம்பர், 2011

போரினால் உறுப்பிழந்தோருக்கு செயற்கை உறுப்புகள்!


சிகிச்சை முகாமுக்கு வந்தவர்களில் சிலர்
இலங்கையின் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சின் ஏற்பாட்டில் செயற்கை அவயவங்களை வழங்கும் சிகிச்சை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட வைத்தியர் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் அடங்கிய குழு இதற்கென விசேடமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேச வைத்தியசாலையில் சனியன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சிகிச்சை முகாம் சுமார் ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 500 பேருக்கு இந்தச் செயற்கை அவயவ சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக