வியாழன், 1 செப்டம்பர், 2011

கேரளா கம்யூனிஸ்ட் களின் வேஷம் விக்கி லீக்ஸ் அம்பலபடுதியத்தியது

  கேரள மார்க்சிஸ்ட் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். இதனால் அந்த கட்சியின் தலைவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷ குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தலைவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் அந்த நாட்டுக்கு எதிராக கண்டனக்குரல் எழுபப்புவது வழக்கமானது.

ஆனால், அமெரிக்க நாட்டு முதலீட்டுக்காக கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள் ரகசிய முயற்சி செய்தனர் என்ற விவரத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம், அந்த கட்சியின் தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை’ என்று தைரியமாக மறுத்து கூறாமல், மழுப்பலான விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் இதோ:

கடந்த 2008 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் குழு கேரளா சென்றது. மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலரும் அவர்களை சந்தித்து பேசினர்.
 கேரள மார்க்சிஸ்ட் என்றாலே, அச்சுதானந்தன் தலைமையில் ஒரு கோஷ்டியும், பினராய் விஜயன் தலைமையில் இன்னொரு கோஷ்டியும் செயல்பட்டு வருவது தெரிந்ததுதான்.  முதலில் அமெரிக்க குழுவினர், பினராய் விஜயன் மற்றும் அவர் ஆதரவு தலைவர்களை அழைத்து பேசினர். அமெரிக்க அதிகாரிகளிடம் அவர்கள் மனம்திறந்து பேசியுள்ளனர். முதல் கூட்டத்தின் போது அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மறுமுறை தொடர்பு கொண்டபோது, அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து பேசினார் அச்சுதானந்தன்.

 அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அமெரிக்க முதலீடு வேண்டும். அது தான் மாநில வளர்ச்சிக்கு நல்லது என்று மார்க்சிஸ்ட் தலைவர்கள் கருத்து வேறுபாடின்றி கூறினர்’ என்றார். விஜயன் கூறுகையில், ‘பாலக்காடு பிளாச்சிமடா பகுதியில் நடந்து வந்த நீண்ட கால போராட்டத்துக்கு காரணம் உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்னைதான்; கோகோ கோலா ஆலைக்கு எதிரானது  அல்ல’ என்று அமெரிக்க தூதரிடம் கூறியுள்ளார்.

‘நாங்கள் எங்கள் மாநில வளர்ச்சிக்கு எதிரான விஷயத்தில் போராட்டம் செய்வதில்லை’ என்று அப்போது விஜயன் மற்றும் பேபியுடன் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த அப்போதைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். இப்படி விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள் சற்று டென்ஷன் ஆனாலும், உண்மையை ஒப்புக்கொண்டு, மழுப்பலான பதில் அளித்தனர்.

 ‘விஜயன் மற்றும் பேபியுடன் நான் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தேன். வெளிநாட்டு முதலீட்டுக்கு நாங்கள் எதிரி போல பலரும் பார்க்கின்றனர்; அது உண்மை அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்’ என்று ஐசக் கூறினார். மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் ஜான் கூறுகையில்,‘ மார்க்சிஸ்ட் இரட்டை வேடம் போடுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையா என்ன’ என்று கிண்டல் அடித்தார்.

பெரிய பிரச்னை அல்ல

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டுக்கு நன்மை என்றால் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதில் தவறில்லை. அதற்காக எங்களின் வெளிநாட்டு முதலீட்டு கொள்கையை எந்த வகையிலும் சமரசம் செய்ய மாட்டோம். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றும் பெரிய விஷயமல்ல. எங்கள் கட்சியில் விவாதிக்கக் கூடிய அளவுக்கு கூட அது பெரிய பிரச்னை கிடையாது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக