- ஐ. நா. சபையின் 66ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சர்வதேச ரீதியாக பயங்கரவாதம் உள்ள நிலையில் இலங்கை யில் பங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட தமிbழ விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டதை அடுத்து, வட மாகாணத்தில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் 22 சத வீதத்தால் அதிகரித்துள்ளன. இதன் மூலம் உலகத்திற்கு எமது அபிவிருத்தி நடவடிக்கைகளின் தாற்பரியத்தை நன்கு அறிந்து கொள்ளக்கூடிய நிலை எற்பட்டுள்ளது.
கடந்த இரு வருடங்களில் நாம் எமது பொலிஸ் சேவையில் 669 தமிழ் பேசும் பொலிஸாரைக் கடமைக்கு இணைத்துள் ளோம். மொத்தமாக தற்போது 1143 தமிழ் பேசும் பொலிஸார் கடமையில் உள்ளனர். எதிர்காலத்தில் மேலும் பலரை இணைக்கவுள்ளோம்.இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மூன்று தசாப்த காலமாக இலங்கையைப் பாதித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் போது அது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்க முடியாது.
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேசம் இலங்கை மீது யுத்தக்குச்சாட்டுகளை சோடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது வருடாந்த மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசார ணையை நடத்த, ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகள் பேரவை வலி யுறுத்துகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் தமக்கு ஆதரவாக இருக்கும்படி, ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தம் நிறைவடைந்துள்ளது. தற்போது இலங்கையில் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து மக்களும் சமாதானமாக அச்ச மின்றி வாழ்கின்றனர்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட தன் பின்னர், தற்போது ஐக்கியமானதும், வினைத்திறன் கூடியதுமான நாட்டை கட்டியெழுப்ப முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகின்றன. தற்போது 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். நாடு சிறந்த வாழ்க்கைச் சூழலை கொண்டுள்ளது. இந்த நிலையில், வடக்கில் குறைந்த எண்ணிக்கையான இராணுவத் தரப்பினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
எமது நண்பர்களான சர்வதேசம், எங்களை இறைமை மிக்க நாடாக செயற்பட ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் உலகில் சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு கூடுதல் முனைப்புக் காட்டப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சமூக, கலாசார மற்றும் மத விழுமிய அடையாளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.
மனித உரிமைகள் என்ற பெயரில் நாடுகளில் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ கலாசார மற்றும் மத விவகாரங்களில் தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும். பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக பல உறுப்பு நாடுகள் பொதுச் சபையில் குரல் கொடுத்த போதிலும் இதுவரையில் அந்த நாட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.
பலஸ்தீன மக்களின் உரிமை உறுதிப் படுத்தும் முயற்சி இன்னமும் யதார்த்த மாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதற்கு ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் காலம் கடத்தாது அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த வேண்டும். கூடுதலாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதனை விடவும், காத்திரமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதனால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படக் கூடும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை களின் போது ஒரு விதமான அணுகுமுறை கள் பின்பற்ற வேண்டியது அவசியமானது. உலகின் சகல நாடுகளும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.
பயங்கரவாதம் தொடர்பில் பக்கச்சார்பான அல்லது மாறுபட்ட கருத்துக்கள் நிலவக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். மிகவும் செல்வந்த நாடுகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றன.
அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் பயங்கரவாத அமைப்புக்கள் நடவடிக்கைகளை தொடர்கின்றன என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகப் பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்து வலுவானதும், நடைமுறைச்சாத்தியமுடையதுமான ஓர் தீர்வினை ஒருமித்த குரலில் உலகிற்கு அறிவிக்க வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடித்ததனைப் போன்றே சமாதானத்தை வென்றெடுப்பது மிகவும் கடினமான சவால் என்பது தமக்கு நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக