ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கெளதம் மேனன் பிடித்த புது ஹீரோ

 கெளதம் மேனன் பிடித்த புது ஹீரோ
சென்னை, செப்.24 (டிஎன்எஸ்) கெளதம் மேனன் இயக்கிகொண்டிருக்கும் 'நீ தானே என் பொன்வசந்தம்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இதில் தமிழில் ஜீவா ஹீரோவாக நடிக்க, இந்தியில் ஆதித்யாராய் கபூர், தெலுங்கில் ராம் ஹீரோவாக நடிக்க, மூன்று மொழிகளிலும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்.

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட சில நாட்களில் கெளதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கில் ஹீரோவக நடித்த ராம் விலகிக்கொண்டார். இதனால் தெலுங்கிலும் ஜீவாவையே ஹீரோவாக வைத்து எடுக்க திட்டமிட்டிருந்த கெளதம், தற்போது ஞானியை ஹீரோவாக தேர்வு செய்திருக்கிறார்.
தெலுங்கு நடிகரான ஞானி, தமிழில் கெளதம் மேனன் தயாரித்த 'வெப்பம்' படத்தில் நடித்திருக்கிறார். (டிஎன்எஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக