வெள்ளி, 30 செப்டம்பர், 2011

குறிகட்டுவானில் யாழ் இந்து மாணவன் பலி கோர விபத்து


குறிகட்டுவான் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் நல்லைநாதன் தனுசன் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்தவராவர்.
இவரது ஈமைகிரிகைகள் இன்று நடைபெறுகிறது.
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவிலுக்கு நவராத்திரி பூஜையினையொட்டி யாழ் இந்து கல்லூரியிலிருந்து ஒரு தொகுதி மாணவர்கள் கோவிலுக்கு சென்று விழிபாடுகளை முடித்து விட்டு வரும் போது குறிகட்டுவான் பிரதேசத்தில் பஸ்ஸில் ஏறும்பொழுது தவறி பஸ் சில்லுக்குள் தலை சிக்குண்டதன் காரணமாக திருநெல்வேலியைச் சேர்ந்த தரம் 9ல் கல்வி கற்றும் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் நல்லைநாதன் தனுசன்; அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக