செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சோனாவை எச்சரித்த போலீஸ் உள்ளே போட்ருவோம்!

Sona
சென்னை: எஸ்பிபி சரண் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதற்கு முன் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் உள்ளே தூக்கி போட்டுடுவோம், என நடிகை சோனாவை எச்சரித்துள்ளது சென்னை போலீஸ்.
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, நடிகை சோனா பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, எஸ்.பி.பி.சரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.இந்த நிலையில் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது புகார் தொடர்பாக வீடியோ பட ஆதாரம் அடங்கிய சிடி ஒன்றை கொடுத்தார்.

இந்த நிலையில் மகளிர் அமைப்போடு சேர்ந்து நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில் மீண்டும் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியையும், தியாகராயநகர் உதவி கமிஷனர் தமிழ்செல்வனையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சோனாவிடம், 'நிச்சயமாக எஸ்பிபி சரண் மீது நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன் தேவையில்லாமல் நீங்கள் மகளிர் அமைப்போடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால், உங்களையே உள்ளே வைக்க வேண்டி வரும்," என்று எச்சரித்தார்களாம் போலீசார்.

இதனால் ஆர்ப்பாட்ட திட்டத்தை சோனா ஒத்திப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் போலீசாரின் இந்த செயல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவும், குற்றவாளிக்கு ஆதரவாகவும் உள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறது சோனாவுக்கு ஆதரவான மகளிர் அமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக