புதன், 14 செப்டம்பர், 2011

மிஸ் யுனிவர்ஸ்சாக அங்கோலா நாட்டின் லைலா லோபஸ் தேர்வு


Miss Univers 2011 Leila Lopes

சாவாபோலோ: 2011ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ்சாக அங்கோலா நாட்டு அழகி லைலா லோபஸ் தேர்வு செய்யப்பட்டு, முடிசூட்டப்பட்டார்.

2011ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி, பிரேசில் நாட்டில் உள்ள சாவ்வோலோ நகரில் நடந்தது. இதில், உலகளவில் 89 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா அழகியான வாசுகி சங்கவாலி (26)யும் கலந்து கொண்டார். இதில் முதல் சுற்றிலேயே ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய அழகி வாசுகி, வெளியேறினார்.

இதில் ஆன்-லைன் வாக்கெடுப்பு மூலம், 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, பிரான்ஸ், உக்ரைன், போர்ச்சுக்கல், பனாமா, பிலிப்பைன்ஸ், அங்கோலா, சீனா, பிரேசில் ஆகிய 10 நாட்டு அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த சுற்றில் முதல் 5 இடங்களில், உக்ரைன், பிலிப்பைன்ஸ், சீனா, பிரேசில், அங்கோலா அழகிகள் தேர்வாகினர்.

இறுதி சுற்றில், உங்களிடம் உள்ள ஒரு பழக்கத்தை நீங்கள் மாற்றி கொள்வீர்களா? ஆம் என்றால் எந்த பழக்கம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மொழிப்பெயர்ப்பாளர் மூலம் பதலளித்த அங்கோலா நாட்டு அழகி லைலா, நான் என்னிடம் உள்ள எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை

ஏனெனில், எனது குடும்பத்தினரிடம் இருந்து பல நல்ல காரியங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அதன்மூலம் எனக்கென சில வாழ்க்கை தத்துவங்களை நிர்ணயித்துள்ளேன். இதனால், எனக்கு உள்ளான அழகை பெற்றுள்ளேன், என பதிலளித்தார்.

கடைசி 5 பேரில் சிறப்பான பதிலை அளித்து, நடுவர்களிடம் பாராட்டை பெற்ற அங்கோல நாட்டு அழகி லைலா லேப்ஸ் 2011ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்டு, முடி சூட்டப்பட்டார். 2ம் இடத்தை பிரேசில் நாட்டு அழகியும், 3ம் பிலிப்பென்ஸ் நாட்டு அழகியும், 4ம் இடத்திற்கு சீனா நாட்டு அழகியும் தேர்வு செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக