புதன், 7 செப்டம்பர், 2011

சாவகச்சேரியில் கடத்தப்பட்ட மாணவன் கொழும்புத்துறையில் மீட்கப்பட்டுள்ளார்!

தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியினில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவன் கொழும்புத்துறைப் பகுதியினில் மீட்கப்பட்டுள்ளார்.
9வயதேயான சந்திரசேகரம் குபேரன் எனும் சாவகச்சேரி நகரப்பகுதியினிலுள்ள டிறிபேக் கல்லூரி மாணவனே கடத்தப்பட்டுள்ளான். பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இம்மாணவன் கடத்தப்பட்டுள்ளான்.
வெள்ளை வானில் வந்த சிலரே வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றுள்ளனர். எனினும் வாகனம் வேறு பாதையினால் ஓடத் தொடங்கியதையடுத்து சந்தேகம் கொண்ட சிறுவன் அழுது குழறியுள்ளான். அதையடுத்து சிறுவனை மோட்டார் சைக்கிள் ஒன்றினில் ஏற்றிச்செல்ல கடத்தல்காரர்கள் முற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் சிறுவன் அழுது குழறியதையடுத்து அவனை கைவிட்டு விட்டு கும்பல் தப்பியோடியுள்ளது.

இந்நிலையில் கொழும்புத்துறைப்பகுதியினில் அநாதரவாக திரிந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டெடுத்து பாடசாலை அதிபரான மதகுரு ஒருவரிடம் கையளித்துள்ளனர். அவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபரிடம் மாணவனை கையளித்துள்ளார்.
இதனிடையே கிளிநொச்சி பொன்னநகர் பகுதியை சேர்ந்த 15 வயதான கணேசன் பிரதீபன் எனும் சிறுவனம் கடந்த மாதம் 24 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளான். தனியார் கல்வி நிலையத்திற்கென புறப்பட்டுச்சென்றிருந்த மாணவன் பின்னர் வீடு திரும்பியிருக்கவல்லையென பெற்றோர் கிளிசொச்சி பொலிஸ் நிலையத்தனில் புகார் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக