தூக்கு தண்டனையில் இருந்து என் தந்தையை காப்பாற்றுங்கள்: சோனியாகாந்திக்கு (ராஜீவ்காந்தி கொலையாளி)முருகன் மகள் உருக்கமான கடிதம்!
தூக்கு தண்டனையில் இருந்து என் தந்தையை காப்பாற்றுங்கள்: சோனியாகாந்திக்கு (ராஜீவ்காந்தி கொலையாளி)முருகன் மகள் உருக்கமான கடிதம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஆகியோருக்கு ஹரித்ரா என்ற மகள் இருக்கிறார்.
வேலூர் சிறையில் பிறந்த இவள் சில காலம் பாட்டியின் பராமரிப்பில் இலங்கையில் வளர்ந்தார். தற்போது 19 வயதாகும் ஹரித்ரா, லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கோர்ட்டு தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஹரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் சிறையில் பிறந்தது எனது துரதிர்ஷ்டமாகும். பெற்றோரின் பராமரிப்பு, அன்பு, உபசரிப்பு எதுவுமே கிடைக்காமல் வளர்ந்து விட்டேன். இந்திய வரலாற்றில் ராஜீவ்காந்தியின் படுகொலை மிகவும் பயங்கரமானது, சோகமானது.
என்றைக்காவது ஒரு நாள் எனது பெற்றோருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவேன். எனது தந்தையின் மடியில் தலை வைத்து படுத்து உறங்குவேன் என்ற கனவு எனக்கு எப்போதும் இருந்து வருகிறது.
எனது வாழ்வில் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களின் இரக்கமும், கருணையும் இல்லையென்றால், இதில் எதுவுமே நிறைவேறாது.
எனவே, கருணை வைத்து எனது தந்தையை காப்பாற்றுங்கள். தந்தை என்னிடம் வர உதவுங்கள். ஒரு ரட்சகராக இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஹரித்ரா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக