ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சரவணபவனின் குடும்பத்திற்கும் மஹிந்த குடும்பத்திற்கு எவ்வளவு நெருக்கம் இருக்கின்றது

Your daughter complaint me that, you haven’t take her to Jaffna
*சரவணபவன் உதயனில் பேசுவது தமிழ்த் தேசியம், உள்ளத்திலும் இல்லத்திலும் கொண்டாடுவது மஹிந்த குடும்பத்துடன் உறவு!
*யாழ்பாணத்து கலாச்சார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் காரணமா?
*தெற்கில் இருந்து வடக்கிற்கு இறக்குமதி செய்யப்படும் கலாச்சார சீர்கேடுகளும், தகவல் தொழில் நுட்பத்தின் தாக்கங்களும்!
*இலங்கையிலும் அமைச்சர்கள் தமது சொத்து விபரங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்!
யாழ்பாணம் நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும், கிறீஸ் பூதம் தொடர்பாகவும் பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டு இருந்தார்கள். இந்த சந்திப்பானது கடந்த வியாழக்கிழமை (Sep.08.2011) இடம் பெற்றிருந்தவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களும் கலந்து கொண்டு இருந்தார்.

அந்த பேச்சுக்கள் நடைபெறுவதற்கு முன்பாக இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ அறிமுகப் பேச்சுக்களின் போது ,மஹிந்த அவர்கள் சரவணபவனை பார்த்து நீர் யாழ்பாணத்திற்கு அழைத்து செல்லவில்லை என்று உம்முடைய மகள் எனக்கு முறையிட்டார் (Your daughter complaint me that, you haven’t take her to Jaffna) என்று சரவணபவனுக்கு கூறியிருந்தார்.
மஹிந்த இவ்வாறு அன்னியொன்னமாக சரவணபவனுடன் பேசிக்கொண்டது அங்கிருந்த பல தமிழ் தலைவர்களை பிரமிக்க வைத்தது. சரவணபவனின் சொந்த பத்திரிகையான உதயன் பத்திரிகை அரசினையும் மஹிந்தவையும் கடுமையாக விமர்சித்து வருகையில், எப்படி இவர்களுக்குள் இவ்வகையான உறவு கொண்டாடப்படுகின்றது என்பதினால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். சரவணபவனின் மகள் மஹிந்தவிடம் முறையிடும் அளவிற்கு சரவணபவனின் குடும்பத்திற்கும் மஹிந்த குடும்பத்திற்கு எவ்வளவு நெருக்கம் இருக்கின்றது என்பதினை இதில் இருந்து ஈழத்தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்பாணத்து மக்கள் அறிந்து கொள்ளலாம்.
ஏனெனில் சரவணபவனால் நடத்தப்படுகின்ற உதயன் பத்திரிகை எவ்வாறு மஹிந்த அரசினை விமர்சிப்பதோடு, தமிழ் தேசியம் குறித்து எழுதிவருகின்றது என்பது யாழ்பாணத்து மக்களுக்கே அதிகமாக தெரியும்.
நாம் நன்றாக பழகும் நண்பர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் பிள்ளைகளை எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டால், அந்த பிள்ளை சிலவேளைகளில் தனது குறைகளை சொல்லும் “அங்கிள் என்னுடைய அப்பா என்னுடைய பிரென்ஸ்களோடை(with friends) வெளியில போகவிடுரார் இல்லை” என்று கூறும். தனது அப்பாவும் நாமும் நல்ல நண்பர்கள் என்பது அந்த பிள்ளைக்கு விளங்குவதினால் அப்பாடியாக எங்களிடம் முறையிடும். இதே போன்ற ஒரு உறவு ஜனாதிபதியுடன் இருந்த காரணத்தினாலேயே சரவணபவனின் மகள் இப்படியாக உரிமையோடு மஹிந்த அங்கிளிடம்(Mahinda uncle) முறையிட்டு இருக்கின்றது.
பத்திரிகையில் தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமையும் பேசும் சரவணபவனார், பழகுவதோ மஹிந்தாவின் குடுபத்துடன். இவரின் மைத்துனரான வித்தியாதரன் பேசுவதினை கேட்டால் தமிழ் தேசியமும் , சுயநிர்ணய உரிமையும் பொறியாக தெறிக்கும். ஆனால் இவர்களின் குடும்ப நண்பர்களில் மஹிந்த குடும்பமும் ஒன்றாகும். புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரின் குடும்பம், மற்றும் 30 ஆயிரம் மக்களை ராஜபக்ஷ குடும்பம் கொலை செய்தது என்று வெளியிலே பிரட்சாரம் செய்கின்றார்கள் , ஆனால் மறுபுறத்தே மஹிந்த குடும்பத்துக்கு உபசாரம் செய்கின்றார்கள். ஆகா நடிப்பதில் சிவாஜி கணேசன் உயிர் உடன் இருந்தால் இவர்களிடம் தோற்று இருப்பார்.
இரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் பிச்சை கேட்க செல்லும் நாஸ்திகனான எம். ஆர். ராதா, வீடு ஒன்றிற்கு செல்வார், பிச்சை கேட்க செல்லும் வீட்டுகார அம்மா முன்னிலையில் சிவனை வேண்டி பாடுவார், அப்பொழுது வீட்டுக்காரர் கேட்பார் “என்னப்பா நீதான் நாஸ்திகனாச்சே பின்னே எப்படி ஆண்டவனைப்பற்றி பாடுகின்றாய் “ என்பார். இது சாமி சோத்துக்காக பாடுகின்ற டூப்பு பாட்டு என்பார். இதே போன்று சரவணபவன் மற்றும் சில த.தே.கூட்டமைப்பினர் அரசியல் பிழைப்பிற்காக தமிழ் தேசியம், சுயநிர்ணைய உரிமையென மக்களுக்கு டூப்பு விட்டு வருகின்றார்கள்.
மஹிந்த கூறிய செய்தியும் , கூறாமல் கூறிய செய்தியும்!
ஜனாதிபதி சரவணபவனுடன் தனியாக பேசிக்கொள்ளாது ஏனைய தமிழ் தலலவர்களின் மத்தியில் மகளின் முறையீட்டினை கூறியதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு ஒன்றாக , சரவணபவன் தன்னுடன் வைத்திருக்கும் மறைமுகமான உறவினை ஏனைய த.தே.கூ தலைவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது ஆகும்.
சந்திப்பிற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் தனக்கும் சரவணபவனின் குடும்பத்தினருக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் குறித்து மஹிந்த பேசியதின் மூலம், ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு செய்தியும் கூறியிருக்கின்றார். நீங்களும் சரவணபவனைப் போன்று உங்கள் மக்கள் மத்தியில் என்னத்தையும் பேசுங்கோ, ஆனால் திரைமறைவில் எங்களோடு ஒத்துழைத்தால் அவரைப்போல நீங்களும் வசதியாக வாழலாம் என்ற தகவலை தந்திரமாக மஹிந்த த.தே.கூட்டமைப்பினருக்கு தெரிவித்துள்ளார். இப்படியாக பல கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியே மக்கள் மத்தியில் தமிழ் தேசியமும், மஹிந்த வீட்டில் குனிந்த தலையுமாக சென்று வருகின்றார்கள். இவர்கள் யார் என்பதினை அவ்வப்போது அறியத்தருகின்றேன்.
சிந்தித்துபாருங்கள் ,மக்கள் இவ்வளவு அழிவுகளை மேற்கொண்டபின்னரும், அது குறித்து ஒருவித கவலையும் கொள்ளாது, அவர்களின் அழிவுகளில் அரசியல் பிழைப்பு நடந்துகின்றார்களே. இவர்களை எப்பொழுது எமது மக்கள் இனம் காணுவார்கள்.
புதுடெல்கியில் எமது தலைவர்கள் சண்டித்தனம் புரிவது, மஹிந்தவுடன் மறைவில் உறவுகளை பேணுவது போன்ற விடயங்களை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவைகளை எழுதினால், சிலர் என்னுடன் கோபித்து கொண்டு, கண்டித்து கடிதம் (e mail) அனுப்புகின்றார்கள். நான் இதனை தற்போது எழுதாது தவிர்த்து விடலாம், அதனை நாளை விக்கிலீக்ஸ் (WikiLeaks) வெளியிட்டால் படிப்பீர்கள்தானே? தமிழக தலைவர்கள் பேச்சளவில் மட்டும் தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்று தற்பொழுது விக்கிலீக்ஸ் கூறியிருக்கின்றது. இதனை நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தோம்.
யாழ்பாணத்து கலாச்சார சீர்கேடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் காரணமா?
உலகத்தினை உள்ளங் கையிலும் ,ஒரு சிறிய குக்கிராமத்திற்குள்ளேயும் கொண்டு வருகின்ற அளவிற்கு தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி வியாபித்து நிற்கின்றது. அறிவு வளர்ச்சி தேடல்களுக்கு, தேவைக்கு அதிகமாக உதவி வரும் தகவல் தொழில் நுட்பத்தின் தாண்டவம் மறு வழியில் இளைஞர் சமுதாயத்தினை தவறான வழிகளுக்கு வழிகாட்டியும் விடுகின்றது. அணுசக்தியானது எவ்வாறு அழிவிற்கும் அமைதிவழிக்கும் பயன்படுகின்றதோ அவ்வாறாகவே தகவல் தொழில் நுட்பமும் தகவல் தருவதில் தாரளாகமாக இருந்துவிடுகின்றது. யாழ்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகளின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுவதற்கு தகவல் தொழில் நுட்பத்தினை தவறாக பயன்படுத்தி கொள்வதும் ஒரு காரணம் எனலாம். முன்பென்லாம் தவறான பழங்க வழங்கங்களை உடையவர்களுடன் தமது பிள்ளைகள் பழகுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் அவர்கள் தவறான வழிக்கு போவதினை ஓரளவிற்கு தடுத்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகளில் பிள்ளைகளை தனியாக இருக்க விடுவதே சில வேளைகளில் தவறாகிவிடுகின்றது. வெளியே எங்கும் செல்லாது, பிள்ளை கணணியுடன் தானே காலத்தினை போக்குகின்றது என்று எண்ணி இருந்தால்! பிள்ளை கணணியூடாக கண்டதையும் கற்றுவிடுகின்றது. பின்னர் அதனை பரிச்சீத்து பார்க்கவும் துடிக்கின்றது. மேற்கத்திய நாடுகளின் குறிப்பாக பெண்கள் இளம் வயதிலேயே தம்மை பாதுக்காத்துக் கொள்ளும் அளவிற்கு நல்லது கெட்டதிற்கு எல்லை போட்டு நடந்து கொள்ளுகின்றார்கள். பாடசாலைகளில் வெளிப்படையாகவே ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு இடையில் பழகும் எல்லைகள் குறித்து விளக்க மளிக்கின்றார்கள். ஒரு மாணவன் மற்றொரு பாடசாலை மாணவி மீது விரும்பம் கொண்டால்! அதனை அந்த மாணவி விரும்பவில்லை என்றால்! தனது இஸ்ரமின்மையினை அந்த மாணவனுக்கு கஸ்ரம் ஏற்படாதவாறு எவ்வாறு விளக்களிப்பது என்பதினை ஆசிரியர்கள் விளக்குகின்றார்கள். நமது நாட்டு பாடசாலைகளில் இந்த விடயங்கள் குறித்து பேசுவதினை தொடக்கூடாத பக்கங்களாக(Untouchable subject) பார்க்கின்றோம்.
கீழ தேசிய நாடுகளில் குறிப்பாக மூன்றாவது உலக நாடுகளை சேர்ந்த இளம் சமுதாயத்தினர், மேற்கத்திய நாடுகளின் வியாபார விளம்பர மாயைக்குள் தம்மை மறந்துவிடுகின்றனர். மேற்கத்திய பழக்கவழங்கங்களை மேலோட்டமாக பார்த்துவிட்டு பரவசம் அடைந்துவிடுகின்றனர். எல்லோரையும் அப்படியாக அளவிடமுடியாது. யாழ்பாணத்து கலாச்சார சீர்கேடுகளுக்கு புலம் பெயர் தமிழர்களும் காரணமென யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி அவர்கள் கூறியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராயவேண்டியது அவசியமாகின்றது.
புலம்பெயர்ந்த மக்களுக்கு சொந்தமான வீடுகளே விடுதிகளாக பயன்படுத்தப்படுகின்றது என்றும், அவர்களுக்கு பணம் தேவை என்பதனால் வேற்று இனத்தவர்களுக்கும் ,அதிகம் லாபம் தேடி தருபவர்களுக்கும் வாடைகைக்கு விடுகின்றனர், பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லைலெயென மேஜர் அவர்கள் மேலும் தெரிவித்து உள்ளார். ஒரு மாநகரசபைக்கு உள்பட்ட பிரதேசத்திற்குள் சட்ட ஒழுங்குகள் சீர்கேடாது பார்த்துக் கொள்ள வேண்டியவர்கள் யார்? மாநகர சபையின் அனுமதி இல்லாது (without city permission) ஒருவர் தனது வீட்டினை விடுதியாக (வியாபார நிலையமாக) நடத்துவதற்கு வழிவிட்டது யார் தவறு?. வர்த்தக அல்லது வியாபார அனுமதி(business permit) இல்லாது ஒரு வீட்டினை விடுதியாக பாவிப்பதற்கு இடமளித்ததவர்கள் யார்? விடுதி சொந்தக்காரர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வீட்டினை விடுதியாக பாவிப்பதற்கு அனுமதி வழங்கிய மாநகரசபை நிர்வாகத்தினையும், பாதுகாப்பு தரப்பினைரையும் குற்றம் கூறுவதினை விடுத்து, புலம் பெயர்ந்த மக்களை கூற்றம் கூறுவதில் எதுவித நிஞாயமும் இல்லை. அடுத்து இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் யாழ்பாண பகுதியில் சிவில் நிர்வாகத்தினை சுதந்திரமாக செயற்பட அனுமதித்தால் இவ்வகையான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும். சில வாரங்களுக்கு முன்னர் யாழ்பகுதியில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்து இருப்பதாகவும், வேறு மானிலத்தில் இருந்து வருபவர்களே காரணம் என்றும் யாழ் அரச அதிபர் கூறியிருந்தார். அதே போன்று அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறுஇனத்தவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் வீடுகளை வாடைக்கு விடுவதாக யாழ் மேயர் தெரிவித்து இருக்கின்றார். இவர்கள் இருவர்களின் குற்றச்சாட்டுக்களை வைத்து பார்க்கும் போது தென்னிலங்கையில் இருந்த சுற்றுலா பயணிகளாக வரும் பெரும்பான்மையினத்தவர்களும் யாழ்பாண கலாச்சார சீர்கேடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கின்றர் என தெரிகின்றது.
யாழ் நகர மேயரானவர் நகரத்தினை புனரமைப்பதற்கும், நகரத்தில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு பதிலாக அவர்களை குற்றவாளிகாக சித்தரிப்பது யாழ்நகர சபையின் இயலாத் தனத்தினை மறைப்பதற்கான மாற்றுவழியே ஆகும். நிர்வாகத்தின் ஆற்றலை வளர்த்து, உலக கண்டுபிடிப்புக்கள் மற்றும் வளர்சிச்களுக்கு ஏற்ப மாறிவரும் புதிய வாழ்க்கை மாற்றத்தில் எவ்வாறு எமது கலாச்சாரத்தினை காப்பாற்றி வளர்ப்பது என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். மறைந்த பேராசிரிய சிவத்தம்பி அவர்கள் கூறியது போன்று ஒரு சமூகத்தின் சிந்தனை என்பது அந்த சமூகத்தில் உள்ள கல்விமான்கள், புலமையாளர்கள், படைப்பாளிகள்(intellectuals) போன்றோர்களின் சித்தனைகளே ஆகும். இவ்வகையானவர்களின் பங்களிப்புக்களை கொண்டு நாகரீக வளர்சிகளில் நமது கலாச்சார பண்புகள் கெட்டுவிடாது போவதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான சிந்தனையாளர்கள் தாமாக முன்வந்த தமது சேவைகளை வழங்க முன்வந்தால் தமிழ் அமைச்சர்கள் விரும்பமாட்டார்கள். தனது அறிவாற்றலை கொண்டு, யாழ்பாணத்தில் பொறியியல் பீடத்தினை மேம்படுத்தி, தமிழ் மாணவர்களுக்கு தனது சேவையினை வழங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அவர்கள் அமைச்சர் தேவானந்தாவினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டார்.
புதிய வளர்சிகளின் விரிவாக்கத்தினால் கலாச்சார பிரச்சனைகள் வேறுநாடுகளிலும் தோன்றின, இந்த பிரச்சனைகளை அந்த நாடுகளில் உள்ள அரசியலோடும்,பாதுகாப்பு தரப்போடும் தொடர்பில்லாத பொது அமைப்புகளின் ஊடாக கையாண்டு இருந்தார்கள். எமது நாடுகளிலும் அனைத்து விடயங்களிலும் அரசியல் வாதிகளும், பாதுகாப்பு படையினரும் தலையிடுவதினால் எதுவுவே உருப்படியாக நடைபெறுவதில்லை. அரசியலில் கலப்பில்லாத சமூக விரும்பிகள், சிந்தனையாளர்கள், கல்விமான்கள் ஆகியோரை அழைத்து இவ்வகையான பிரட்சனைகளை ஆய்வு செய்து, அதனூடாக தீர்வுகளை காணுவதற்கு முயற்சிக்க வேண்டும். விடுதிகளில் இரு பாலாரும் இணைவதினை தடுப்பதினால் மட்டும் கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்திவிட முடியாது. முறைப்படி திருமணம் செய்யாது குடும்பம் நடத்தும் அரசியல் வாதிகள் சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இருந்தால்! எப்படி சமூதாயத்தினை திருத்துவது?
இலங்கையிலும் அமைச்சர்கள் தமது சொத்து விபரங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்!
அரசியல் வாதிகளில் இருந்து அரச உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டு வரும் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக இந்தியாவில் தியாகி அன்னா ஹராறெ அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தி இருந்தார். ஜான் லோக்பால் சட்டம் உட்பட அவரின் வேண்டுகோளை அரசு நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்டத்தின் பின்னர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டு இருந்தார். 1962 ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் யுத்தம் மூண்டவேளை இந்தியா தனது இராணுவத்திற்கான அவசர ஆள்சேர்ப்பினை மேற்கொண்டிருந்தது. அன்னா அவர்கள் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளபட்டு இருந்ந்தார். 1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் கெம் கரன் எல்லையில் பாகிஸ்தானிய இராணுவம் மேற்கொண்ட தாகுதலில் இவர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தார். மகாத்மா காந்தி, விவேகானந்தர், வினோபாவா போன்றோரின் கொள்ளைகளில் நம்பிக்க உடைய அன்னாவின் போராட்டத்தினால் இந்தியாவில் பாரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டில் 70 வீதமான மக்கள் தாம் லஞ்சம் கொடுப்பதினை தவிர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்கள்.
இந்தியாவில் அண்மையில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பலர் தமது சொத்து விபரங்களை நாட்டு மக்கள் அனைவரும் அறியும்படியாக அறிவித்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து தமிழக முதல்வர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா அவர்களும் தனது சொத்துவிபரங்களை அறிவித்து இருந்தார். இவ்வாறு இலங்கையிலும் அரச அமைச்சர்களும், அரசியல் வாதிகளும் தமது முழு சொத்து விபரங்களை மக்களுக்கு அறிவிக்குமாறு இலங்கை மக்கள் கோரவேண்டும். திடிரேன அரச சகோதரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கின்றார்கள், ஆனால் நாடோ கடனில் மூழ்கியிருக்கின்றது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக புதியதாக அரசாங்கம் கடன் பெறுகின்றதென, அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் பொதுசெயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். நாடு கடனில் மூழ்கியிருக்கும் பொழுது அமைச்சர்கள் பணக்காரர்களாக உருவெடுத்துக் கொண்டிருப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று மக்கள் கெட்கவேண்டும்.
வட மாகாணத்தினை சேர்ந்த அமைச்சர் மினிபஸ்களுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கின்றார். வெளிநாடுகளில் சகோதர்களின் பெயரில் எரிபொருள் வினியோக நிலையங்கள் வாங்கி விட்டீருக்கின்றார். இவருக்கு இவ்வளவு பணம் எவ்வாறு, எங்கிருந்து வந்தது என்பது குறித்து எல்லாம் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.
archunan2009@live.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக