வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சந்தேகநபர் மரணம்! கம்பஹா - தொம்பே பொலிஸில் பதற்றம்

கம்பஹா - தொம்பே பொலிஸ் நிலைய பகுதியில் ஒரு வகை பதற்ற சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு பிரதேசவாசிகள் கூடியுள்ள நிலையில் இந்த பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இணைப்பு:- இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் அங்கிருந்த பொலிஸ் வாகனங்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
பின்னர் சிவில் பாதுகாப்புப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக