ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

நாகாக்க.யாழ் இளைஞர்கள் மீது சேறு பூச வேண்டாம் புலன்பெயர்ந்தவர்களே


யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது! இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது என சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…? இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள் இவைதான். இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள். கைத்தொலைபேசி, நெட் கஃபே பாவனை அதிகரித்துவிட்டது. பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்.
கர்ப்பமடைகிறார்கள். இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். இவையொன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்காத விவகாரங்களில்லைதான். உலகில் வேறெங்கும் நடக்காத விடயங்களும் இல்லைதான்.
ஏதோ, இப்போதுதான் இவை இங்கு நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்து ஒரேயடியாக முழு யாழ்ப்பாணமும் சீரழிந்துவிட்டதாகக் கூறுவது சரியானதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக