செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தொடர்பாடல் வசதியின்மை இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியது-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

வடக்கு, கிழக்கிற்கிடையே தொடர்பாடல் வசதியில்லாமல் போனதாலே இனங்களிடையே முரண்பாடு ஏற்பட்டதாக தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் சேவையை யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கையும் தெற்கையும் உரையாடல் உறவு மூலம் இணைத்துவைக்கவும் இங்குள்ள மக்களின் உறவுகளை நெருக்கமாக்கவும் டெலிகொம் நிறுவனம் செய்யும் சேவையைப் பாராட்டாமலிருக்க முடியாது என்றும் அமைச்சர் விளக்கினார்.

யாழ். பண்ணைப் பகுதியில் அமையப் பெற்ற சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,30 வருட கால யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வாழ்கின்ற இந்த வட பகுதி மக்களுக்கு தென் பகுதி மக்களுக்குக் கிடைக்கின்றதைப் போன்ற சகல அபிவிருத்திகளும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எதிர்பார்ப்பு. அதன் ஒரு முக்கிய மைல் கல்லாகவே ரெலிக்கொம் வட பகுதி மக்களுக்காக இன்று அறிமுகப்படுத் தும் இந்த i-srilanka தொழில் நுட்ப வசதியை நான் கருதுகிறேன்.
எமக்கு ஜனாதிபதி அவர்கள் சில இலக்குகளைத் தந்துள்ளார். 2016 ஆம் ஆண்டளவில் நாம் அந்த இலக்குகளை எட்டியே ஆக வேண்டும். இப் பொழுது தகவல் தொழில்நுட்ப செறிவு வீதம் நூற்றுக்கு 30 வீதமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டளவிலே அது நூற்றுக்கு 75 வீத மாக அதிகரித்தே ஆக வேண்டும். தக வல் தொழில்நுட்ப பாவனை அதிகரிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப பாவனை அதிகரிப்பின் மூலமாக வெளிநாட்டு வருமானம் ஒரு பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். அதேபோன்று ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இது போன்ற அனைத்து இலக்குகளையும் நாம் நாடு தழுவிய ரீதியில் முன் கொண்டு செல் வதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக