புதன், 14 செப்டம்பர், 2011

பாகிஸ்தானை நம்ப முடியாது அமெரிக்க துணை அதிபர் பேச்சு!.


வாஷிங்டன்: தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானை நம்ப முடியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த புகழ்பெற்ற இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி தகர்த்தனர். அதன் 10ம் ஆண்டு நினைவு தினம் நேற்றுமுன்தினம் அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு தனியார் தொலைகாட்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் பேசியதாவது: அமெரிக்காவின் நம்ப முடியாத நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இன்னும் அதிகமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அல் கய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அந்த நாடு சரியான ஒத்துழைப்பு வழங்காததால், ஆப்கானிஸ்தான் அமெரிக்க வீரர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஆனால், மற்ற விஷயங்களில் பாகிஸ்தான் நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறது. இது போதாது. இரு தரப்பினருக்கும் அளிக்கும் வகையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இவ்வாறு ஜோ பிடென் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக