ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கார் சாவியை சோப்பில் பதித்து கள்ளச்சாவியை செய்து கார் திருடும்


மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கியும் போதவில்லை: ஆடம்பர  வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட என்ஜினீயர் கைது
பெங்களூர் கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் யதிஷ்குமார் (வயது 35). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் ஆடம்பர பேர்வழி. இதற்காக தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அடகு கடையில் வைத்து கடன் பெற்று செலவு செய்துவிட்டார். தனது சொந்த காரையும் விற்றுவிட்டார்.
இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார். ஆனால் இந்த பணம் அவரது ஆடம்பர வாழ்க்கைக்கு போதவில்லை. எனவே வேலை நேரம் போக மீதியுள்ள நேரத்தில் கார்களை திருடி விற்று ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இவர் கார் வாங்குவது போல் கார்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களுக்கு செல்வார். அங்கு புதிய காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறி வெளியே எடுத்து செல்வார். அப்போது அந்த கார் சாவியை சோப்பில் பதித்துக்கொள்வார்.
பின்னர் அந்த சோப்பு பதிவை வைத்து கள்ளச்சாவியை தயார் செய்து கொள்வார். பின்னர் அந்த புதிய காரை யார் வாங்குகிறார்கள் என்று கண்காணித்து கொள்வார். அந்த காரை வாங்கும் நபர் பற்றிய தகவல்களையும், அவர்களது வீட்டு முகவரியையும் பெற்றுக் கொள்வார்.
பின்னர் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார். அந்த கார்கள் எங்கேயாவது நிறுத்தப்பட்டு இருந்தால் போலி சாவியை பயன்படுத்தி அந்த காரை திருடிவிடுவார். இப்படியே நூதன முறையில் பல கார்களை அவர் திருடி வந்துள்ளார்.
விதானசவுதா அருகே உள்ள எம்.எஸ்.பில்டிங் பகுதியில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த காரின் உரிமையாளர் யார் என்று போலீசார் விசாரித்தபோது, தனது பெயர் மனோஜ்குமார் என்றும், இந்த காரை ஒரு வியாபாரி தனக்கு விற்பனை செய்ததாகவும் கூறினார்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், யதிஷ்குமார் வியாபாரி ஒருவரிடம் கடன் பெற்றதற்காக தான் திருடிய காரை அவருக்கு கொடுத்துவிட்டதாகவும், வியாபாரி அந்த காரை மனோஜ்குமாருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூர் விதானசவுதா போலீசார் வழக்கு பதிவு செய்து யதிஷ்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்தனர்.
A techie involved in stealing cars was arrested by the city police and six luxury cars sold by him were seized. Yathish Kumar, a 35 year old software engineer, drawing a monthly salary of Rs 50,000 used to steal cars and sell them at cheaper rate to meet the expenditure of his luxurious life. The modus operandi of Yatishkumar was to visit showrooms on the pretext of purchasing car and go for a free ride during which time he used to take print of the key in a soap. He used to get information about new car purchaser and their address. Later, when the car was parked on the road, he would steal it using the duplicate key he had made from the print on his soap. Married and having a son, Yatishkumar had taken heavy loan by pledging ornaments of his wife and had also sold his car. When he could not lead a luxurious life he started indulging in car theft. Police said Yatishkumar s crime came to light when a constable inquired owner of a stolen car parked near MS Building. Yatishkumar had sold the car to a merchant in return of part of loan taken from him. When he failed to return the money, the merchant sold the car to his friend Manoj Kumar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக