வெள்ளி, 30 செப்டம்பர், 2011

பெரும் எதிர்ப்பார்ப்பு 'வாகை சூடவா' - 'வெடி'!

Vaagai Sooda Vaa and Vedi
இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.

இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.விமல், இனியா நடித்துள்ள இந்தப் படத்தில், கே பாக்யராஜ் முக்கிய வேடமேற்றுள்ளார். படம் முழுக்க 60களின் பின்னணி என்பதால் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார் சற்குணம். தமிழ் திரையில் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும் என்று, இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்த சக இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான படம் வெடி. விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் ரொமான்டிக் படம் இது. சவுரியம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படங்கள் இரண்டுமே ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை என்பதால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய திரைவிருந்தாக இவை அமையக்கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக