திங்கள், 12 செப்டம்பர், 2011

படுகொலை சம்பவம் ,எங்களுக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ இருந்தது.

நீயா? நானா? இன்ஜினியர் நன்பணின் தலையையெடுத்த ஈகோ விவகாரம்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகையா. இவரது மகன் காளிதாஸ் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கான்ரெக்டர் ஒருவரிடம் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

காளிதாஸ் உறவினர் வீட்டு திருமனம் இன்று (11/09/2011) நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி 10.09.2011 அன்று இரவு காளிதாஸ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டாலின், நெல்சன், ராமராஜன், பிரசாத் ஆகியோர் திருமண வீடு மற்றும் மண்டபத்தில் பிளக்ஸ் போர்டு கட்டினர்.

அதன்பின் நண்பர்கள் அனைவரும் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்தார்.


ஸ்டாலின்





காளிதாஸ்




இதனைப் பார்த்த காளிதாஸ், நெல்சன் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அவர்களை விடாமல் துரத்திச் சென்ற ஸ்டாலின், காளிதாஸை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த சகதியில் மயங்கி சரிந்தார். சம்பவ இடத்திலிருந்து ஸ்டாலின் தப்பினார்.

இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுரண்டை இன்ஸ்பெக்டர் சங்கர் தேவ், சம்பவ இடத்திற்கு விரைந்தார். காளிதாஸை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், வழியிலேயே காளிதாஸ் உயிர் பரிதாபமாக பிரிந்தது.

இதையடுத்து ஸ்டாலினை தனிப்பிரிவு போலீசார் தேடினர். ஆனால் தப்பியோடிய ஸ்டாலின் சுரண்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும், விசாரணையில் 'நானும் காளிதாசும் நண்பர்கள். எங்களுக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ இருந்தது. கடந்த வாரம் பரன்குன்றாபுரத்தில் உள்ள புரோட்டா கடையில் சாப்பிடும்போது கிளம்பிய ஈகோ பிரச்சனையால் எங்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. காளிதாஸை குத்திக் கொல்லுவதற்கு இந்த ஈகோ பிரச்சனைதான் காரணம்' என்று ஸ்டாலின் கூறினார்.

இதனிடையே இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் கிளப்பிய பதட்டத்தின் எதிரொலியாக அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

படங்கள்: ராம்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக