திங்கள், 5 செப்டம்பர், 2011

மாற்றுத் திறனாளிகளுக்கான "சுயம்வரம்':சென்னையில் கோலாகலம்

சென்னை:""அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான "சுயம்வரம்' நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்'' என்று, அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "சுயம்வரம்' நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, மணமக்களை தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில், கீதாபவன் அறக்கட்டளை தலைவர் அசோக் கொயல் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக, தமிழக சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் அனைத்தும், இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். அதில் முதற்கட்டமாக, அவர்களுக்கான திருமண உதவித்தொகை கேட்ட உடன் வழங்கவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மாற்றுத் திறனாளிகளுக்கென்று, வேலை வாய்ப்பு தொடர்பாக, தமிழக அரசு அறிவித்த, 3 சதவீத இட ஒதுக்கீடு, அரசு மற்றும் தனியார் துறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன், மாநில ஆணையர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக