புதன், 14 செப்டம்பர், 2011

புனர்வாழ்வு முகாம்களாக மாற்றவேண்டிய சிறைச்சாலைகள்

சிறைசாலைகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்கள் என மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறநெறிகளை பாதுகாக்கும் சமூகத்தினுள் சிறைச்சாலைகளை மூடிவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டே உரைற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் எழுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்ற வாசகத்தை அடிக்கடி காண்பதாகவும் அதன் உண்மைத் தன்மையை தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் உணர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறையில் இருந்த போது தமது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கும் அன்றைய ஆட்சியாளர் தமக்கு தடையேற்படுத்த முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய போது ஏனைய சிறைக்கைதிகள் தமக்கு அனுதாபங்களை தெரிவித்திருந்தமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக