ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யாழ்ப்பாணத்தில் வட மாகாண விவசாய கண்காட்சி!

இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப் பொருளிலான வடமாகாண விவசாய கண்காட்சி நாளை திங்கட்கிழமை முதல் அடுத்த சனிக்கிழமை வரை யாழ் மாவட்ட பயிற்சி நிலைய வளாகத்தில் நடை பெறவுள்ளதாக வடமாகாண விவசாய- கால்நடை அபிவிருத்தி- காணி- நீர்ப்பாசன- கடற்றொழில் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சி இரவு 7.00 மணி வரை தினந்தோறும் இடம்பெறும் இக்கண்காட்சியில் 32 க்கும் மேற்பட்ட விவசாய காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறினார். அதேவேளை தனியார் துறையினரின் காட்சி கூடங்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் நாள் நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்- வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும்- 6ஆம் திகதி விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்தனவும்- 7ஆம் திகதி நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும்- 8ஆம் திகதி கைத்தொழில்-வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்இ- 9ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும்- 10ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
அன்றைய தினம் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக