செவ்வாய், 20 செப்டம்பர், 2011

51000க்கு ரூ.6 லட்சம் கந்து வட்டி தம்பதி கைது

சென்னை : கந்து வட்டி கேட்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரை மிரட்டிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராபர்ட் பெர்னாண்டஸ் (25). கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர், 2009ம் ஆண்டு ஜெஜெ நகரை சேர்ந்த தேவராஜ் (60), அவரது மனைவி புஷ்பா (56) ஆகியோரிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கினார்.
அந்த 1 லட்சத்தில் ரூ.10 ஆயிரம் வட்டியாகவும், டாக்குமென்ட் சார்ஜ் என்று கூறி ஸி 39 ஆயிரமும் பிடித்துக் கொண்டு ரூ.51 ஆயிரம் மட்டுமே ராபர்ட்டுக்கு கொடுத்தனர். அவரும் பணத்தை வாங்கிக்கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக ரூ.3 லட்சத்துக்கு மேல் வட்டி கட்டி வந்துள்ளார்.


கடந்த 2 மாதமாக அவரால் வட்டியை கட்ட முடியவில்லை. இதனால் கணவன்&மனைவி இருவரும் ராபர்ட்டிடம் 14 செக்குகள், பைக் ஆர்சி புத்தகம் ஆகியவற்றை மிரட்டி வாங்கியுள்ளதாக தெரிகிறது. “பணத்தை தந்து விடுகிறேன், அதையெல்லாம் திருப்பி கொடுத்து விடுங்கள் என ராபர்ட் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள், “நீ தரவேண்டிய பணத்துக்கு இது சரியாகி விட்டது என்று கூறி அவரை விரட்டி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று, ராபர்ட் வீட்டுக்கு வந்த தேவராஜ், புஷ்பா, “நீ இன்னும் ரூ.6 லட்சம் வட்டி பணம் தரவேண்டி இருக்கிறது. அதனால் ஒழுங்காக பணத்தை கொடுத்து விடு. இல்லையென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். பயந்துபோன ராபர்ட், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கொளத்தூர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

போலீசார் உரிய விசாரணை நடத்தி கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தேவராஜ், புஷ்பா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல¢ கந்து கட்டி வழக்கில் சிறை சென்றவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக