சனி, 3 செப்டம்பர், 2011

யாழ். குடாநாட்டில் 24 மணி நேரம் பொலிஸ் ரோந்து

யாழ்ப்பாண குடாநாட்டில் 24 மணி நேரமும் பொலிஸாரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிக்காரோ தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத் தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பொலிஸ் ரோந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறினார். பொலிஸ் பொதுமக்கள் உறவு பேணப்பட்டு வருகிறது. மக்களுக்கு உதவி புரிவதே பொலிஸாரின் பாரிய பொறுப்பாகும் என்றார். ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக