ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

23 குழந்தைகளுக்கு கவனக்குறைவாக ஏற்றப்பட்ட எச்ஐவி ரத்தம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள அரசு மருத்துவனையில் தலசீமியா எனப்படும் ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதித்த ரத்தத்தை டாக்டர்கள் ஏற்றியுள்ளனர். இதனால் 23 குழந்தைகளையும் எச்ஐவி தொற்றியுள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள தலசீமியா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 குழந்தைகளுக்கும், அவர்களில் பலர் சிறுமிகள், டாக்டர்கள் ரத்தம் செலுத்தியபோது கவனக்குறைவாக எச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர்கள் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் எதிர்காலமே பாழாகி விட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குமுறியுள்ளனர்.

ஜுனாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நகரங்களைச் சேர்ந்த தலசீமியா பாதித்த குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். வாரம் இருமுறை இக்குழந்தைகளுக்கு இங்கு ரத்தம் மாற்றப்படும். அதில்தான் டாக்டர்கள் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக