வியாழன், 29 செப்டம்பர், 2011

1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை 1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை

1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை
புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளையதினம் காலை 11 மணியளவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
11ஆயிரத்து 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தனர்.
இவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 240 பேர் 28 சந்தர்ப்பங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 29ஆவது தடவையாக மேலும் 1700பேர் விடுவிக்கப்படுகின்றனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ். சதீஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக