நல்லூர் தேர்பவனியில் திருடர்களின் கைவரிசை: ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு!
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற வேளை சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்களின் தங்கச் சங்கலிகளை அபகரிக்க முற்பட்ட பெண்கள் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸாரும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமானோர் சிவில் உடைகளில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நான்குக்கும் மேற்பட்ட தாலிக்கொடிகளும் ஏழு தங்கச் சங்கிலிகளும் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன
இன்னும்தான் நம் குலப்பெண்கள் தங்க நகை மோகம் கொண்டு மற்றவர்களுக்கு ஷோ காட்டப்போய் பேரு ஆபத்தை வலிந்து வாங்குகிறார்கள் பாவம் கணவர்கள்.
நன்றி நெருப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக