வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

வீரமாக பேசுவார் money க்காக அய்யாவையும் அம்மாவையும் மாறி மாறி

தேர்தலுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசி வந்த அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பின் கொஞ்ச நாட்கள் மவுனமாக இருக்கிறார்.

ஆட்சியிலுள்ளவர்களுக்கு சாதகமாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடும் சுயமரியாதைக்காரர் சின்னச் சின்ன விஷயங்களை பெரிதாகவும், பெரிய விஷயங்க¬ ளக்கூட மிகவும் சிறிதாகவும் வெளிக்காட்டும் அவரது பேச்சு. தேர்தலில் நேரடியாக அவருக்குத் தொடர்பில்லை என்றாலும் தேர்தலைப் பற்றிய வியாக்கியானங்களுக்கு அவரிடம் எப்போதுமே பஞ்சமில்லை. கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து சினிமாக்கள் விடுபட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அவர் இன்றும் கறுப்பு வெள்ளைதான். தேர்தலுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசி வந்த அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பின் கொஞ்ச நாட்கள் மவுனமாக இருக்கிறார். இதோ அவரின் மனசாட் சியின் வாக்குமூலம்:
இன்றைய முதல்வருக்கு நான் கடந்த ஆட்சியில்தான் எதிரியே தவிர இப்போது இல்லை. அவருக்கும் எனக்கும் ஒத்துப் போகின்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஏதாவது ஒன்று புலப்பட்டுவிட்டால், அவருக்கு ஏதாவது ஒரு புதுப்பட்டத்தைக் கொடுத்து ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிடுவேன். எனது காத்திருப்பில் ஏற்கெனவே இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டது கொஞ்சம் வருத்தம் கொடுத்தாலும் இன்னும் ஓரிரு மாதத்தில் அந்த சூழல் அமைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த காத்திருக்கும் நேரத்தில் என் வாழ்க்கையின் கடந்த காலங்களை அசைபோடுவது எனது வழக்கம்தான். இப்போதும் அந்தக் காட்சிகள் எல்லாம் என் கண் முன்னே வந்து போகிறது.
கடற்கரையோரம் உள்ள மாவட்டத்தில் பிறந்தேன். அப்பா டெய்லராக வேலை செய்து வந்தார். படிக்க வைக்கவே சிரமமான காலம் அது. சுயமரியாதை கருத்துக்களால், பேச்சால் இந்தியாவையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்தார் தாடிக்கார கிழவர். சூத்திரர்களின் பிள்ளைகள் படிக்க சென்னையில் அவர் ஒரு பாடசாலை நடத்தி வர அதில் கொண்டு வந்து விடப்பட்டேன் நான். பள்ளிப் படிப்பிலிருந்தே அவரின் கருத்துக்களோடு இணைந்து வளர்ந்த நான் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். படிப்புச் செலவுகள் அனைத்தையுமே அவரின் சீடர்கள் யாராவது கவனித்துக் கொள்வார்கள். எனவே படிப்புக்கு பிரச்னையில்லாமல் நான் தொடர்ந்து கொண்டிருக்க, அவர் போடும் எல்லா பொதுக் கூட்டத்திற்கும் ஆஜராகி அவர் பேசுவதை குறிப்பெடுத்துக் கொள்வதுதான் என் வேலை.
நான் முதுகலைப் படிப்பிற்கு கட்டணம் செலுத்த பணம் இல்லை. யாரிடம் கேட்டும் கிடைக்காத சூழநிலை. அப்போது முதியவரின் கொள்கையில் தீவிரமாக இருந்து பின் னாளில் அமைச்சரான ராகமானவரிடம் விவரங்களைச் சொன்னேன். அவரிடமும் அப்போதைக்கு பணம் இல்லாததால் தனது மனைவியின் தங்கத்தாலியை எடுத்து என் னிடம் கொடுத்து அதைப் பணமாக்கி பீஸ் கட்டச் சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே அந்த நன்றியை அவர் வீட்டு வாசலிலேயே விட்டுவி ட்டேன்.
இப்போது கூட கட்சிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘பீஸ்’ கட்ட வேண்டும் என்று கேட்டால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டேன். ‘தாலியை வித்து படிக்க வை’ன்னு நாக்கு கூசாமல் கூறி அனுப்புவேன்.

முதியவரின் திருமணத்தின்போது ஏற்பட்ட குழப்பத்தில் அவரின் சீடர்களில் ஒரு பகுதி பிரிந்து போக நானும் சிலரும் அவரின் பக்கமாக நின்று கொண்டோம். அவருக்கு அடுத்தபடியாக அப்போது கொள்கை முழக்க நாடகங்கள் நடத்தி வந்தார் ஒரு நடிகர்.
முதியவர் தனது வீட்டிலிருந்து பணம் வாங்கி சொந்தப் பணத்தில் அந்தக் காலத்திலேயே 116 ரூபாய்க்கு பெரிய இடத்தை வாங்கிப் போட்டிருந்தார். இன்று அந்த இடத்தின் மதிப்பு பல கோடிகள் ஆகும்.
பெரியவராலேயே மதித்துப் பாராட்டப்பட்ட அந்த நடிகர் தனது சொந்தப் பணத்தில் அந்த இடத்தில் ஒரு திடலைக் கட்டிக் கொடுத்தார். பின்னர் நான் திடலிலிருந்த அந்த நடிகரின் பெயரை நீக்கிவிட்டேன். அதேபோல் அந்த நடிகருக்கு சிலை வைக்கப் போவதாகவும் பல்லாண்டுகளாய் வசூல் செய்து ஏமாற்றி வருகிறேன்.
அதே போல் பெரியவருக்கு உண்மையான வாரிசுகளாக இருந்து பணியாற்றிய பலரும் என்னிடம் கணக்குக் கேட்டதால் அவர்களை இயக்கத்தைவிட்டே வெளியே அனுப்பி இருக்கிறேன். இப்படி பல பேரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டு நான் அங்கு ஒட்டிக் கொண்டேன். வெளியே போனவர்கள் எல்லாம் எனக்கு எதிராக கடைவிரித்துவிட்டார்கள். என்ன கொடுமை இது.
சொத்தை அபகரிக்க நான் வேந்தராக வலம் வர நான் செய்த தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அம்மையை கையில் போட்டுக் கொண்டு ஒரு வழியாக எல்லா எதிரிகளையும் வெளியேற்றிவிட்டேன்.
நான் எழுதிய புத்தகங்கள் சிலவகை இருந்தாலும், என்னை விமர்சனம் செய்து எழுதப்பட்டதுதான் அதிகம். தேசிய எழுச்சிக்கான சிந்தனைவாதியான முதியவரின் கருத் துக்களை என்னுடையதாக்க நினைத்தேன். எதிரே கடை விரித்தவர்கள், கோர்ட்டுக்கு போய், தடுத்துவிட்டனர்.
எனது துணையின் சகோதரி மரணத்தில் அப்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அதில் எனது பொது வாழ்க்கைக்கே பெரும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை. அந்த விவகாரத்தில் என் அந்தரங்கங்களும் மேடைகளில் ஆரவாரமாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த சிக்கலிலிருந்து கருணையுடன் என்னைக் காப்பாற்றினார் அந்தத் தலைவர்.

நான் முதியவரின் வளர்ப்பு என்பதால் தனி மனித ஒழுக்கத்தில் அவ்வளவாக நான் தவறியது இல்லை. இருந்தாலும் இயற்கையின் குணங்கள் அவ்வப்போது என்னிலி ருந்து வெளிப்படுவதும் உண்டுதான்.
கருணையான தலைவரின் பெண் வாரிசை என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அந்த வாரிசை உலக அறிவுக்குள் வழி நடத்திய பங்கு எனக்கும் கொஞ் சம் உண்டு. என்னோட மிகுந்த பாசத்தோடு நடந்து கொண்ட அந்த வாரிசு இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பதால் அதை நேரில் சென்று பார்த்து கண் கலங்கித் திரும்பினேன்.

அதே நேரத்தில் தொலைக்காட்சி விவகாரம் ஒன்றில் இன்றைய வி.வி.ஐ.பி. அடைக்கப்பட்டிருந்த போதும் அவரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். நான் அவர்களுக்கு சமூக நீதியை காத்ததாக கொடுத்த பட்டம் அவர்களால் அப்போது எல்லா இடங்களிலும் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் ராஜ பதவியிலிருந்து விலகியவர் சென்னை வந்தபோது அவரின் சமுதாயத்தின் பெயரைக் கூறி அவருக்கு வரவேற்பு கொடுத்தேன். தேவைப்படும் போதெல்லாம் ஜாதி அஸ்திரத்தை எடுக்க நான் தயங்கியது இல்லை.
அதே நேரத்தில் பால விவகாரத்தில் கருணைத் தலைவர் அடைக்கப்பட்டபோது ‘போலீஸ் அழைத்தால் போக வேண்டியதுதானே?’ என்று நான் தொலைக்காட்சியில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. மண்டல் குழு பரிந்துரைக்காக பெரும் போராட்டம் நடத்தியது, 69 சதவித இட ஒதுக்கீட்டில் தன்னையும் இணைத்துக்கொண்டது என சில பொது விஷயங்களிலும் எனக்குப் பங்கிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் பிய்ந்து போன சட்டையுடன் நான் நடமாடிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போதோ 30 லட்ச ரூபாய் காரில் பவனி வருகிறேன். மகன், மகள் என அமெரிக்காவில் செட்டில்ட். ஒரு மகனுக்கு கட்சியில் பவர் எழுதிக் கொடுத்துவிட்டேன். கூடிய விரைவில் கிரயம் செய்துகொடுக்கவும் முடிவு செய்திருக்கிறேன்.
பெரியவரால் உருவாக்கப்பட்டது என்பதைத் தவிர நான் நடத்தும் அரசியல் கட்சிக்கு குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. ஆனால் இன்று பெரியவரின் பெயர் சொல்லி போராடி வரும் மக்களை எல்லாம் கிண்டலடிப்பதும், கேலி செய்வதும்தான் என் பொழுது போக்கு. அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளை உடைப்பதில் ஒன்றுக்கொன்று சிண்டு முடிந்து விடுவதிலும் எனக்கு நிகரானவர்கள் இல்லை என்பதே என் கருத்து.

முன்னேற்ற கட்சியிலிருந்து மறுமலர்ச்சிக்காரர் வெளியேறியபோது அவருடன் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர். அப்போது முன்னேற்ற கட்சிக்காரர் மிகவும் நொந்து போய்விட்டார். அப்போது அவர் பொது வாழ்விலிருந்து விலகி விடுவார் என்று பேசப்பட்டது. இதனால் வருத்தப்பட்ட சிலர் இருவரையும் நேரில் சந்தித் துப் பேச வைத்தால் பிரச்னை முடிந்து சுமுக நிலை திரும்பும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார். அப்போது நான் என்னால் முடிந்த அளவுக்கு உள்ளடி வேலைகளைச் செய்து இருவரையும் சந்திக்க விடாமல் பார்த்துக் கொண்டேன். அதுபோலவே மக்கள் கட்சி விவகாரத்திலும் பல்வேறு குளறுபடிகளைச் செய்து அதிலிருந்து சில தலைவர்களை பிரிந்து செல்ல வைத்து மகிழ்ந்து போனேன்.
எந்த நேரமும் ஒரே நிறத்தில் சட்டை அணிந்து கொண்டிருப்பது எனக்கு அலுத்துப்போய்விட்டது. இதனால் எனது மனநிலையும் ஒரு மாதிரி அழுத்தமாகிவிட்டது. எனவே, என்னை ஒரு மனநிலை மருத்துவரிடம் என் துணை அழைத்துக்கொண்டு போக, வீட்டில் தனியாக இருக்கும்போது வெள்ளைச் சட்டையை அணிந்து கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். நானும் மருத்துவரீதியாக அதையே நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
முதன் முதலில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சகாயமாக ஒரு காரை வாங்கி எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதன்பிறகு வழக்கம் போல் அவரையும் கருத்து வேற்றுமை பாராட்டி வெளியேற்றிவிட்டேன்.
அதேபோல் அண்ணனின் மரணத்திற்குப் பிறகு அவரின் உடன்பிறப்பையும் அங்கிருந்து அடித்து விரட்டி விட்டேன். அதேபோல் பெரியவரின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்த நீதியரசர் ஒருவரின் மரணத்திற்கு கட்சிக்காரர்கள் யாரும் போகக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டதால் வெறும் ஆறு பேர் மட்டுமே அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். நான் ஒருவரை பழி வாங்க வேண்டுமென நினைத்துவிட்டால் இறந்தாலும் அவர்களை நான் விடமாட்டேன் என்பதற்கு இதுவே நல்ல சான்று.
ஆனாலும் எனது அரசியல் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அம்மாவை சந்திக்கத்தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.’
வீரமாக பேசுவார்  money க்காக அய்யாவையும் அம்மாவையும் மாறி மாறி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக