புதன், 17 ஆகஸ்ட், 2011

(Bore) போராட்டம் நடைபெறுமாம் - சஜித் பிரேமதாச

போராட்டம் நடைபெறும் - சஜித் பிரேமதாச
நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து இன்று ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகத்தின் முன் மேற்கொள்ளவிருந்த போராட்டத்தினை விகாரமாதேவி பூங்காவின் அருகே மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தவின் முன்பு இன்றையதினம் சட்டவிரோதமாக கூட்டம் கூடவோ, ஊர்வலம் நடத்தவோ, போராட்டம் நடத்தவோ தடைவிதிக்குமாறு பொலிஸாருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இன்று மாலை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் பங்குகொள்ள வரும் எந்தவொரு கட்சி உறுப்பினர்களையும் எவராலும் தடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக