திங்கள், 29 ஆகஸ்ட், 2011

அம்மையார் அவர்களே!பிரபாகரனாதியோர் ஒழிந்து போய் விட்டார்கள் இனியாவது

“என்ன செய்யலாம் இதற்காக”

தங்கள் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாக வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியல் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வை.கோ.. சீமான்.. பழ நெடுமாறன்.. என்பவர்கள் வலையில் புதிதாக‌ சிக்கியிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்மணியொருவர்.. இந்த அம்மையார் தமிழக அரசியல்வாதிகளின் இனவெறிச் சகதிக்குள் தான் விழுந்தது போதாதென்று.. ஒற்றுமையாய் ஒன்றுபட்டு வாழ நினைக்கும்.. வாழ விரும்பும். தமிழர்களையும் அதற்குள் விழ வைத்து.. அவர்களுக்கு இனவெறியேற்றும் பணியில் இறங்கியிருக்கிறார் …இது ஏன்?..இது எதற்காக? ..ஆம் இவரும் அந்த தமிழக சுயநல அரசியல்வாதிகளைப் போல் தனது சுய விளம்பரத்திற்காகத்தான் இதைச் செய்கிறார் என்பதை அவரது நிகழ்கால மற்றும் கடந்தகால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது…
கடந்த மாதம் 9ம் திகதி “என்ன செய்யலாம் இதற்காக” என்று தமிழிலும் “What is to be done about this” என்று ஆங்கிலத்திலும் மேலும் பிரெஞ்சு மொழியிலுமாக மொத்தம் மூன்று மொழிகளில் தனது புத்தகத்தை சென்னையில் வெளியிட்ட‌ “இன பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு” எதிரான சர்வதேச இயக்கத்தின் இமடார் நிறுவனத் தலைவி நிமல்கா பெர்ணாண்டோ அவர்கள்தான் இந்த இனவெறிச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது‍‍.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக