செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஆடு, மாடுகள் தான் கிடைக்கும் என்று பயந்த நேரத்தில் பாடப் புத்தகம் கிடைத்துள்ளது- சுப.வீரபாண்டியன்

சென்னை: ஆடு, மாடுகள் தான் கிடைக்கும் என்று பயந்த நேரத்தில் பாடப் புத்தகம் கிடைத்திருக்கின்றன என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்யன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்யன்,

இன்றைய நாள் என்றைக்கும் நினைக்கப்பட வேண்டிய நாள். இனிமேல் பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்கும். பாடப் புத்தகங்களே கிடைக்காது, ஆடு மாடுகள் தான் கிடைக்குமோ என்று அல்லல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பாட ப்புத்தகங்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.
நீதிமன்றம் சொல்லியிருக்கிற ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், மாணவர்களுடைய படிப்பதற்கான அடிப்படை உரிமையை இந்த அரசு மறுத்திருக்கிறது என்பது.
இதைக்காட்டிலும் ஒரு அரசுக்கு கடுமையான கண்டனம் இருக்க முடியாது. படிக்கிறது மாணவனின் அடிப்படை உரிமை. ஏறத்தாழ ஒன்றரை கோடி மாணவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக மறுத்திருக்கிற ஒரு பெரும் குற்றத்தை தமிழக அரசு செய்திருக்கிறது.

திமுக ஆட்சியில் மூன்றாண்டுக்கும் மேலாக சிந்தித்து கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், எவ்வளவு சரியானது என்பதை இன்றைக்கு காலம் மெய்ப்பித்திருக்கிறது. இது திமுக தலைவர் கருணாநிதிக்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக