புதன், 17 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம், வக்கீல் புகழேந்தி


ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் :டோக்ரா
ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா அளித்த பேட்டி ஒன்றில்,

’ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு கவர்னரிடம் இருந்து வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். கவர்னரின் உத்தரவு வந்த 7-வது நாள் தூக்கு தண்டனை வேலூர் ஜெயிலில் வைத்து நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக