இலங்கைக்கு டயோனியல் குளோரைட் எனும் இரசாயன பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் காரணமாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவர், சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து இன்டர்போலினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கென்யூட் சிறிபாலன் பீரிஸ் அல்லது கனீ பீரிஸ் என்பவருக்கு இலங்கை நீதிமன்றமொன்று பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
தற்போது அவரை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இன்டர்போல் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கமவிலுள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றின் பயன்பாட்டிற்காக என்ற போர்வையில் இந்த இரசாயனப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நச்சுப் பானமொன்றுக்காக அது இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக