புதன், 10 ஆகஸ்ட், 2011

ஆடலுடன் பாடலும் சின்மயி முதன்முதலாக ஓசூரில்

பாடகியாய் மட்டும் அறியப்பட்ட சின்மயி முதன்முதலாக தனது நடனத் திறமையை ஓசூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்துகிறார்.
அங்கு ஒரு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடுகிறார் சின்மயி. கூடவே சில பாடல்களுக்கு டான்ஸும் ஆடப் போகிறாராம்.
26 வயதாகும் சின்மயி தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் ஏராளமான படங்களில் பாடி வருகிறார். ஓசூர் நிகழ்ச்சியில் தமிழ், இந்திப் பாடல்களைப் பாடுவதோடு சில பாடல்களுக்கு ஆடவும் போகிறார். இதில் தபாங் படப் பாடல் முன்னி பத்னாம் மற்றும் தீஸ் மார் கான் படப் பாடல் ஷீலா கீ ஜவானி ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும், எந்திரன் பாடல் கிளிமஞ்சாரோ மற்றும் ஐஸ்வர்யா ராயின் ஹிட் பாடல் கஜ்ரா ரே ஆகியவற்றுக்கும் சின்மயி ஆடுகிறார்.
அவர் நடனப் பயிற்சியில் பிசியாக இருந்த வேளையில் யாரோ அவரது இ-மெயில் மற்றும் சமுதாய இணையதளத்தை ஹேக் செய்து தாறுமாறாக செய்தி அனுப்பத் துவங்கிவிட்டனர்.
உடனே அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அத்துடன் நில்லாமல் கையோடு தனது பாஸ்வர்டுகளை மாற்றிவிட்டார். தற்போது ஹேக் பிரச்சனை தீர்ந்தது என்றாலும் அவருக்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கும் இதனால் தலைவலியே ஏற்பட்டுவிட்டதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக