வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பிரதமராக துடிப்பவர் திமுக தயவை நாடி டீல் மேகிங்

தயாநிதிக்காகப் போராடும் காங்கிரஸ் புள்ளி

தயாநிதி மாறன் தப்பிவிடுவார்ன்னு சொல்றாங்களே...’’
‘‘அதற்கான முயற்சி காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் செய்றாங்களாம். ஆனால் சி.பி.ஐ. வட்டாரங்கள் பெயரை சேர்த்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்க ளாம்.’’
‘‘தயாநிதிக்காகப் போராடும் காங்கிரஸ் புள்ளி யாரோ?’’
‘‘பிரணாப் முகர்ஜியை கை காட்டுகிறார்கள் டெல்லியில் உள்ளவர்கள். ஒருவேளை குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுவிட்டாலும், அவரைக் கைது செய்யாமல் எப்படி காப்பாற்றுவது என்றும் காய் நகர்த்தி வருகிறாராம், பிரணாப்.’’
‘‘அது எப்படி சாத்தியம்...?’’
‘‘குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும், அவரை விசாரணைக்கு அழைப்பார்கள். போனால் உடனே கைது செய்வார்கள். இப்போது சி.பி.ஐ. கோர்ட்டில் தினமும் வாதம் போய்க் கொண்டு இருக்கிறது. அந்த வாதம் முடிந்த பின்னர் மூன்றாவது குற்றப்பத்திரிகையில் உள்ளவர்கள் வாதாடுவார்கள். அதோடு சேர்த்து ஜாமீன் போட்டால், தயாநிதி திகார் போகாமல் வந்துவிட முடியும் என்று நினைக்கிறார்களாம். அது வரையில் வழக்கை இழுத்தடிக்க டெல்லியில் முயற்சி நடக்குது... இதே பாணியில் தயாளு அம்மாளையும் தப்பிக்க வைக்க முயற்சி நடக்குதாம்...’’
‘‘அவருக்கு இதில் என்ன லாபம்...?’’
‘‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா... பிரதமர் பதவி மீது பிரணாப் முகர்ஜிக்கு எப்பவுமே ஒரு கண் இருக்குது.அதை அடையறதுக்காக...தி.மு.க. உதவியை நாடியி ருக்கிறாராம்.’’
‘‘இது என்ன டி.வி. சீரியல் மாதிரி திடீர் திருப்பமா இருக்கே...?’’
‘‘விவரமா சொல்றேன் கேளு... போன மாசம் கருணாநிதியை வந்து பிரணாப் முகர்ஜி சந்திச்சாரு இல்லே. அப்ப, பிரதமராகும் தன் முயற்சிக்கு ஆதரவு தரணும்னு கரு ணாநிதியைக் கேட்டுக் கொண்டாராம். ‘மன்மோகன் சிங் இருக்கும் வரை இந்த வழக்குகளில் இருந்து தி.மு.க.வினர் தப்பிக்க முடியாது. நான் பிரதமராக ஆதரவு தந்தால் உங்களை வழக்கிலிருந்து காப்பாற்றுகிறேன்’ என்று உறுதி கொடுத்திருக்கிறார். கருணாநிதியும் ‘ஓகே’ சொல்லிட்டாராம்.’’
‘‘இந்த சந்திப்பு நடந்து ஒரு மாதம் ஓடிடுச்சே... அதுக்கு அப்புறம் ஒண்ணும் தகவல் இல்லையே...?’’
‘‘அதுக்கு அப்புறம்தான் நெறைய மாற்றங்கள் நடந்திருக்கு. ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையும்,உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் ராசா நீதிமன் றம் வரை இழுத்துவிட்டதற்குப் பின்னணியிலும் பிரணாப்தான் இருக்கிறாராம்.’’
‘‘பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே...?’’
‘‘இன்னும் கேள்... சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருக்காம். அதோடு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் பெயர் இணைக்கப்பட்டதால் பிரதமர் டென்ஷன் ஆகியிருக்கிறாராம்.’’
‘‘பிரதமர் டென்ஷனுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் என்ன சம்பந்தம்...?’’
‘‘நெருக்குதல் அதிமானால், பிரதமர் பதவியில் இருந்து விலகவும் மன்மோகன்சிங் தயாராயிட்டாராம். இந்த வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம், பிரணாப் முகர்ஜி. இதற்காகத்தான் தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமா இருக்கிறாராம்.’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக