ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

முன்னாள் நீதியரசர் போன்ற துஷ்பிரயோகக்காரர் உலகில் இருக்க முடியாது !

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள துஷ்பிரயோகத்துக்கு எதிரான அமைப்பின் முதலாவது கூட்டத் தொடரில் பிரதான விசேட உரையை முன்னாள் பிரதம நீதியரசர் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இக்கூட்டத்தில் அரசை சாடியும் குற்றம் சுமத்தியும் பேசியுள்ளார். இது பற்றி நீங்கள் கூற விளைவதென்ன?
பதில்:
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் பேசியிருப்பது பரிகாசமாகவே உள்ளது. இப்படியானதொரு அருவருப்பான செயல் எதுவுமில்லை என்றே கூறவேண்டும். இவர் எந்த இடத்தில் பேசினாலும், எதனைக் கூறினாலும் சாதாரண சமூக மட்டத்திலேயே பேசியிருக்க வேண்டும். இதனை விட்டு விட்டு அரசாங்கத்தை சாடிப் பேசியிருப்பது அவ்வளவு நல்ல காரியமாக எனக்குத் தென்படவில்லை. அத்துடன், இதனை ஒரு சிறந்த ஆரோக்கியமான போக்காக நான் கருதவும் மாட்டேன். முன்னாள் பிரதம நீதியரசர் துஷ்பிரயோகத்தைப் பற்றிப் பேசியிருப்பது, இன்றைய நிலையில் பரிகாசத்திற்குரியதும் மிகவும் வேதனைக்குரியதுமான ஒரு உரை ஆகும் என்பதையே என்னால் கருத முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக