வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

கலாநிதிமாறன் மீது அதான்டா, இதான்டா பட அதிபர் புகார்

`எம்பயர் மூவிஸ்' என்ற பட நிறுவனத்தின் அதிபர் அந்தோணி நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில்,அதான்டா, இதான்டா என்ற பெயரில் ஒரு படம் தயாரித்ததாகவும், பாண்டியராஜன், விவேக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஓளிபரப்பு உரிமையை ரூ.10 லட்சத்துக்கு சன் டி.விக்கு விற்பனை செய்ததாகவும், ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே சன் டி.வி.யில் இந்த படத்தை வெளியிட்டு விட்டார்கள்.
இதனால் படத்தை வினியோகஸ்தர்கள் யாரும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் 1 கோடி வரை எனக்கு இழப்பு ஏற்பட்டது.
இது பற்றி கேட்ட போது, என்னை மிரட்டினார்கள் என்றும், இது தொடர்பாக சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு ஏற்பட்ட நஷ்ட தொகையை வசூலித்து தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, தென் சென்னை இணை போலீஸ் கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக