செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சென்னை ராஜீவ் காந்தி சிலைகள் மீது தார் பூசி அவமதிப்பு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை தார்ப் பூசி அவமதிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள மூவரையும் காக்கக் கோரி பல்வேறு வழிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலையில் தார் பூசி அவமதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்த செயலை சிலர் செய்து விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து சிலைக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். சிலை அவமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் காங்கிரஸார் அங்கு குவிந்துள்ளனர். சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

வேப்பேரியிலும்

இதேபோல வேப்பேரி காவல் நிலையம் அருகே உள்ள ராஜீவ் சிலையும் அவமதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக