செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

லண்டன் கலவரம் தொடர்கிறது - தமிழர் சொத்துக்களும் சேதம்? (படம்)

லண்டன் கலவரம் தொடர்கிறது - தமிழர் சொத்துக்களும் சேதம்? (படம்)



நேற்று முன்தினம் இரவு ஒரு சில வன்முறை சம்பவங்களுடன் ஆரம்பமாகிய லண்டன் கலவரங்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக பிரித்தானியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் புலம்பெயர் தமிழர்களின் வீடுகள், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

கடந்த வியாழக்கிழமை ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பிரித்தானியப் பொலிஸார் சுட்டதையடுத்து அன்று கலவரம் மூண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று லண்டனில் முழு பகுதியிலும் உச்சக்கட்ட கலவரங்கள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பல நூற்றுக்கணக்கான கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதோடு பெற்றோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இதன் போது தமிழர்களுக்கு சொந்தமான பல கடைகளும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸார் முயன்று முடியாமல் போயுள்ளமையால் கலவரத்தை அடக்கும் இராணுவத்தினர் லண்டன் பிராந்தியம் முழுதும் வரவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறைகளில் ஈடுபட்டிருந்த 150க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக