வியாழன், 4 ஆகஸ்ட், 2011

புலிகளை பின்பற்றிய நோர்வே கொலையாளி

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நோர்வேயில் துப்பாக்கிச்சூட்டினால் 87 பேரை பலிகொண்ட கொலையாளியான பெஹ்ரின் பிரெய்விக்கிற்கும்  தொடர்பு இருக்கலாம்  என செய்திகள் தெரிவிக்கின்றன.நோர்வே கொலையாளியான அண்டர்ஸ் பெஹ்ரின் பிரெய்விக், ஒஸ்லோவில் தாக்குதல் நடாத்துவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அவரது 1,518 பக்கங்கள் கொண்ட அறிக்கையில்

விடுதலைப் புலிகளை  தான் முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுகொலையாளியின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பில் பின்பற்றிய கொள்கைகளைத் தான் ஐரோப்பாவும் பின்பற்ற வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்களை துப்பாக்கி முனையில் வெளியேற்றியது மற்றும் 1985 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம், 1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஆகியவற்றை நோர்வே கொலையாளி சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளுடன் நோர்வே கொலையாளி தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களிடம் சாதனங்களை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களை முன்மாதிரியாகக் கொண்டே யூத இலக்குகள் தகர்க்கப்படுவதாக புதுடில்லிக்கான இஸ்ரேலிய இராஜதந்திரி மார்க் சொபர் தெரிவித்துள்ளார். ஒஸ்லோவில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் மேலதிக தகவல்களை திரட்டவும் மற்றும் விசாரணைகள் முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக