வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

சமசீர் கல்வியால் கிளாகுகளைதான் உருவாக்கலாமாம் விஜயகாந்த் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டார்


கிளார்க்குகளை உருவாக்கலாம் :அப்துல்கலாம்
போன்றவர்களை உருவாக்க முடியாது.( அட அறிவாளியே அப்துல் கலாம் எந்த காண்ட்வேன்டில் படித்தார்?)
சட்டசபையில் விஜயகாந்த் பேச்சு
சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அது உண்மையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி உருவாக வழிவகுக்குமா என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில்,   ’’நகர்ப்புறங்களில் அதிக வசதிகள் கொண்ட பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறும்போது, எங்களுக்கு 4-ம் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுதான் இன்று 8-ம் வகுப்பில் உள்ளது. அதில் என்ன புதிதாக படிக்கப் போகிறோம் என்றனர்.

ஆனால் அதே நேரத்தில் எந்த வசதியும் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது.

பொதுப்பாடத் திட்டத்தின்படி தேர்வு நடத்தினால் நகர்ப்புற பணக்காரப் பிள்ளைகள் எளிதாக அதிக மார்க்குகள் வாங்கி மேல்படிப்புக்குச் செல்ல முடியும். கிராமப்புறத்தினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இது எந்த வகையில் சமூக நீதியாக அமையும்?
தற்போதுள்ள பாடத்திட்டத்தை எல்லோரையும் படிக்கச் செய்தால் அதன் மூலம் கிளார்க்குகளை வேண்டுமானால் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது.
உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவர முதலில் அடிப்படை வசதிகளை கல்விக் கூடங்களில் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டமும் முன்னுக்குப் பின் முரணானது என்றே கருதுகிறேன்’’ என்று பேசினார்.

டாக்டர் அப்துல் கலாம் எந்த பாடத்திட்டத்தில் படித்தார் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாமே! பழைய mechalay கல்வி திட்டத்தில் உருவானவர் தான் அப்துல் கலாம்

Name : வா.நேருஅப்துல்கலாம் உருவானதற்கு அடிப்படைக் காரணம் அவர் தனது தாய்மொழியான தமிழில் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்ததுதான். முதல் 10 ஆண்டுகள் , அதாவது L.K.G., U.K.G.,முதல் 5-ம் வகுப்பு வரையிலாவது அனைவரும் தமிழில் படிக்க வேண்டும், அது அப்துல்கலாம் போன்றவர்களை உருவாக்கும். திரு. விஜயகாந்த் அவர்கள் -ஜப்பான் மொழியில் ' டோட்டாசான் ' என்ற பெயரில் வந்த 'ஜன்னல் ஓரத்தில் சிறுமி' போன்ற கல்வி குறித்த நூல்களைப் படிக்கவேண்டும் . இன்றைய மெட்ரிகுலேசன் கல்வி பிள்ளைகளை சுயமாக வளரவும் , சுயமாக சிந்திக்கவும் அனுமதிக்கிறதா? இல்லையெனில் மாற்றுவது எப்படி ? என உண்மையான கல்வியாளர்களோடு கலந்து முடிவெடுக்க வேண்டும்.

Name : Ravichandran யார் வேண்டுமானுலும் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் நம் நாட்டில், பணமும் பதவியும் இருந்தால்.

Name : vanavilCountry : Belgium எஜமானி விசுவாசம் ?

Name : jegaveeraphandian திரு. விஜயகாந்த் அவர்களே... நீங்கள் திரும்பத் திரும்ப ஒரு சினிமாக்காரனைப்போலவே பேசிக்கொண்டிருக்கிறீர் கள்; அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கல்விகுறித்து உமக்குப் பேசத் தகுதி இல்லை என்பது உமக்கே நன்கு தெரியும்போது ஏன் வீணாக உளறிக்கொட்டுகிறீர்? தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் ஐயா. தமிழ்நாட்டில் சமநிலையுடன் ஒருதலைசார்பாகச் சிந்திக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து சொல்லவும் பேசவும் அறிக்கைகளைச் சமர்பிக்கவும் நிறைய அறிஞர் பெருமக்கள் உள்ளனர். அம்மாவைக் குளிர்விப்பதற்காக எதை எதையோ வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்!

Name : Country : India ஐயோ ஐயோ...

Name : arun யோவ் காமெடி பீஸ், அப்துல் களம் எந்த convent ல படிசாரு, தரமான கல்வியதான உன்னோட பையன் படிச்சான், அப்பறம் எதுக்கு fail ஆனான், போயி உன்னோட பையன அப்துல் கலாமா உருவாக்கு அப்பறம் மத்த பிள்ளைங்கள பத்தி கவலை படலாம், தண்ணிய போட்டினா என்ன வேணாலும் பேசுவிய. அந்த அம்மா வரியா எத்துணப்ப எங்க போயிருந்த, இத செயல் படுத்தினது உனக்கு பிடிகளான supreme கோர்ட் கண்டனம் தெரிவி பாப்போம்.

Name : karthik Country : India அதனாலதான் நீ அப்துல்கலாம் ஆகலியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக