புதன், 3 ஆகஸ்ட், 2011

Micro Wave ஆய்வில் எச்சரிக்கை கர்ப்பிணி ஓவன் பயன்படுத்தினால் குழந்தைக்கு ஆஸ்துமா வரலாம்

வாஷிங்டன் : கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி (மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர். மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட, அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ÔÔகர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன், அவை இயங்கும்போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன்மூலம், குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும்ÕÕ என ஆய்வுக் குழுவின் தலைவர் டி&குன் லி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக