வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நடிகை குட்டி பத்மினியின் நிலம் அபகரிப்பு :முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீது புகார்



முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீது புகார்பிரபல நடிகை குட்டி பத்மினி சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்து வருகிறார். இவர், நேற்று தனது மகள் கீர்த்தனாவுடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் என்ற கிராமத்தில் எனது பெயரிலும், எனது மகள்கள் 3 பேர் பெயரிலும் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு மாந்தோட்டமும் உள்ளது.

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜியிடம் ரூ.31/2 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு வட்டி கொடுத்து வந்தேன். ஆனால் திடீரென்று வட்டியோடு சேர்த்து ரூ.61/4 லட்சம் தரவேண்டும் என்று சிவாஜி அவசரப்படுத்தினார்.

என்னால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. அந்த பணத்துக்கு பதிலாக எனது பெயரில் இருந்த நிலத்தை சிவாஜி எழுதி வாங்கிக்கொண்டார்.
அந்த நிலத்தோடு, கடந்த 2006-ம் ஆண்டு எனது மகள்களின் பெயரில் இருந்த மேலும் 4 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி அபகரித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், பள்ளியில் படிக்கும் எனது மகள்களை கடத்திச் சென்றுவிடுவோம் என்று எனது வீட்டுக்கு வந்தே மிரட்டினார்கள்.

இதனால் நான் அப்போது போலீசில் புகார் கொடுக்க முடியவில்லை. அபகரிக்கப்பட்டுள்ள எனது மகள்களின் நிலம் ரூ.5 கோடி மதிப்புடையதாகும். அதை மீட்டுத்தர வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி மத்திய சென்னை இணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக