வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பணயக்கைதிகளைக் காப்பாற்றுவதற்கு உயிர்களை விலை கொடுக்க வேண்டியிருந்தது

தருஸ்மான் அறிக்கையைப் பற்றிய உண்மைகள்
 தயான ்ஜயதிலக
தனித்துவமானதும் மதிப்பிற்குரியதுமான சண்டே ரைம்ஸ் பத்தி எழுத்தாளர் லசந்த குருகுலசூரியவின் கட்டுரையைத் தவிர (ஆகஸ்ட் 14,2011ல் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் காணப்பட்ட “ ஒரு நாய்க்கு கெட்டபெயர் வழங்கி அதை தூக்கிலிடுவது” என்ற கட்டுரை) ஸ்ரீலங்கா ஊடகங்கள் மற்றும் கொழும்பின் கருத்துரையாளர்கள் என அனைவரும் சமகால சரித்திரத்தில் யுத்தத்துக்குப் பிந்திய கட்டத்தில் குடியியல் சமூகத்தில் மிகவும் முக்கியமான அறிவுசார்ந்த ஒரு நிகழ்வினை முற்றாகத் தவற விட்டுள்ளார்கள்.
எங்கள் ஓய்வுபெற்ற தொழில்முறையாளர்களையும் மற்றும் புத்திஜீவிகளையும் குறைந்தளவு வேறுபாட்டுடன் புகழ் வீரர்களாக நடத்துவது ஒரு ஊடகப் பழக்கமாகிவிட்டது, ஒன்றில் அறியாமையினாலோ அல்லது தெரிவு செய்வதை தவிர்க்கும் காரணமாகவோ மார்க்கா நிறுவனத்தால் எம்மத்தியில் உள்ள பழமைவாய்ந்த சிந்தனைச் சிற்பிகளினால் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் இன்றைய நாட்களில் பளிங்குபோல் தெளிவாகப் பளிச்சிடும் அழுத்தமான பிரச்சனையான தருஸ்மான் அறிக்கை அல்லது மிகச்சரியாகக் கூறுவதானால் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழுவினரின் அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் மிகவும் மோசமானது  எங்கள் ஊடகங்களும், கருத்துரையாளர்களும் ஸ்ரீலங்காவின் அனுபவமிக்க பழமையான புத்திஜீவிகளில் வடித்தெடுக்கப்பட்ட இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும்,மிகவும் வேறுபட்ட தன்மையைக் கொண்ட அரச சேவை உத்தியோகத்தரும் உலகிலேய மிகவும் மதிப்புவாய்ந்த மிகச்சில புத்திசாலிகளில் ஒருவர் எனக் கருதப்படும் கொட்பிறே குணதிலகாவினால் மேற்கொள்ளப்பட்ட தருஸ்மன் அறிக்கையின் விரிவான பகுப்பாய்வை அறியவில்லை போலத் தெரிகிறது.
ஸ்ரீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டங்களின் உண்மையும் பொறுப்புக்கூறுதலும் என்கிற தலைப்பிலும், ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறுதலைப்பற்றிய ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையின் பகுப்பாய்வும் மற்றும் பரிணாமமும் எனும் உபதலைப்பிலும் ஒரு ஆய்வுக் கட்டுரையினை  அவர் மார்கா நிறுவனம் 21.07.2011 ல் பொறுப்புக்கூறுதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நல்லிணக்கம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்குக்காகத் தயாரித்திருந்தார்.
ஊடகங்கள் சாதாரணமாக இந்தக் கதையினை தவற விட்டுவிட்டதாகவே நாம் கருதிக்கொள்வோம். நான் ஆவலோடு காத்திருந்தது இந்தச் செய்தி பற்றிய பிரசுரத்துக்கும் மற்றும் வரும் வாரங்களில் அதைப்பற்றிய கடுமையான வர்ணனைகளும் அந்த வார்த்தைகள் உரக்கப் பேசப்பட்டு, ஜீரணமாகிப் பிரதிபலிப்பை ஏற்படுத்துவதற்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவுமே.
அத்தகைய முன்னேற்றங்களுக்காக நான் விசேட ஆர்வத்தோடு காத்திருந்தது ஏனென்றால் கொட்பிறே குணதிலகாவினால் பரிணாமத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தருஸ்மான் அறிக்கை, ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் ஆயுதப்படையினரையும் விமர்சிக்கும் அதேவேளை அவரது வைரமணியினைப்போன்ற முக்கிய நுண்ணறிவு, சுத்திகரிக்கப்பட்ட வழிமுறைகள், மற்றும் தாராளவாத மனிதநேய நன்னெறிகள் போன்றவற்றுடனான சரியான ஒத்திசைவுள்ள நிரூபணத்தை தயார்படுத்தி, மேற்கு, சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தளமாகக் கொண்டியங்கும் உலக குடியியல் சமூகம், வெளிநாட்டில் குடியேறி வாழும் தமிழ் சமூகம், மற்றும் கொழும்பில் உள்ள மேல்தட்டு நாகரிக வலையமைப்புகள் என்பன ஸ்ரீலங்காவின் மீது நடத்தும் தாராளவாத மனிதநேய மற்றும் மனித உரிமைகள் பற்றிய சொற்பொழிவின் அடிவேரை நறுக்கித் தள்ளிவிடும் என்பதற்காகவுமே.
இதில் எனக்குத் தோன்றுவது கொட்பிறே குணதிலகாவினைப் போன்ற கலைக்களஞ்சியத்தைப் போல படிப்பறிவும் மற்றும் அறிவார்ந்த உருவமுமாக எழுந்து நிற்கும் ஒருவரது நேர்மை, மதிப்பு, மற்றும் நீதியான தீர்ப்பு வழங்கல் என்பன ஒருபோதும் கேள்விக்கு இலக்காவதில்லை, ஆனால் ஒரு போரை மதிப்பீடு செய்யும்போது அறிவுள்ள ஒரு குள்ளன் (ஒப்பீட்டுக்காக வேண்டி) பகிரங்க கண்டனமாக ஸ்ரீலங்கா அரசுக்கு ஒழுக்கவியல் போதனை செய்வதைப் போன்று முற்றிலும் வேறுபடுகிறது.
யுத்தத்தில் சிக்கலான மையப் பிரச்சினைகளான, சுமத்தப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற வரலாற்று வரையறை மீது சட்டபூர்வ அரச அதிகாரம் ஆதரவு வழங்குதலைப் பற்றிய அவருடைய கருத்து குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீட்டிக்கும் தன்மையான ஒரு ஊடுருவும் புறநிலைக் கண்ணோட்டத்தில் உள்ளது. கொட்பிறியின் முடிவுகளிலிருந்து இதோ ஒரு நுண்ணிய பகுதி:
“ அறிக்கையில் உள்ள பிரச்சினைகளின் அடிவேர் தாங்கியிருப்பது, அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் வடிவமைக்கப்பட்டது. எந்தவித மனிதாபிமான நோக்கமுமின்றி தமிழர்களை பூண்டோடு அழிக்கும் நோக்கத்திலா அல்லது பணயக்கைதிகளைக் காப்பாற்றும் முயற்சியிலா என்பதில்தான். இந்த விளக்கத்தின் மூலமாக குழுவானது தனது அரைக்கண் பார்வையினூடாக அரசாங்க முயற்சிகளை உருக்குலைக்கத்தக்கவாறு தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி வேண்டுமென்றே இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக வழங்கப்பட்ட மிகவும் வித்தியாசமானதும்  சரியானதுமான விளக்கங்களை நீக்கிவிட்டு மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்களை கொடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விபரிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் இந்தக் குறைபாடு காணப்படுகிறது( முடிவுகள், பக்கங்கள் 28 – 29 ).
“ ....எல்.ரீ.ரீ.ஈ யினர் வேண்டுமென்றே தங்கள் இராணுவ முயற்சிகளுக்கு பொதுமக்களை ஒன்றுகூட்டியதுடன்  தாக்குதலற்ற வலயங்களையும் யுத்த களமாக்கினார்கள். தாக்குதலற்ற வலயங்களில் பொதுமக்களை இராணுவ முயற்சிகளில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தியதுடன் பொதுமக்களைப் பலவந்தமாகச் சேர்த்து தங்கள் பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தியதுடன், மற்றும் இராணுவ முயற்சிகளுக்குத் தேவையான சகலதையும் அவர்களைக் கொண்டு செய்வித்தனர். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கம் இடையில் உள்ள வேறுபாட்டை எல்.ரீ.ரீ.ஈ வெகு திறமையாக மங்கிப்போக வைத்தது. இராணுவத்தினரின் நடவடிக்கையின் நோக்கத்தையும் விகிதாசாரத்தையும் இப்படியான ஒரு நிலையில் எவ்வாறு மதிப்பிடப்பட முடியும்? மேலும் எல்.ரீ.ரீ.ஈ சரணடைய மறுத்தும் வந்தது.
இதிலிருந்து தெளிவாகத் தெரியவருவது, எல்.ரீ.ரீ.ஈ யினைத் தோற்கடிப்பதற்கும் மற்றும் பணயக்கைதிகளைக் காப்பாற்றுவதற்கும், எல்.ரீ.ரீ.ஈ போராளிகள், கட்டாயமாக இராணுவசேவைக்கு சேர்க்கப்பட்ட பொதுமக்கள், படை வீரர்கள் மற்றும் போராளிகள் அல்லாதவர்கள் என பாரிய மனித உயிர்களை விலை கொடுக்க வேண்டியிருந்தது இன்றிமையாத ஒன்றாக இருந்தது என்பதே.
இந்தக்கட்டத்தில் இராணுவம் தனக்கு கிடைத்திருக்கும் தெரிவுகளையும் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும் எடைபோட்டுப் பார்த்து, வெளிப்படையாக அது தாக்குதலை நிறுத்த முடியாது எனவும் மற்றும் முன்னோக்கிச் சென்று எல்.ரீ.ரீ.ஈ யின் எதிர்தாக்குதலுக்கு விரைவான முடிவு கட்டவேண்டும் என்றும் முடிவு செய்தது. இதில் குறிப்பிடவேண்டிய ஒரு விடயம், எல்.ரீ.ரீ.ஈ இருந்த விரக்தியான நிலையில் அவர்கள் மிகப் பாரியளவு பொதுமக்களின் மரணங்களை விளைவிக்கக் கூடிய எத்தகைய கொடும்பாதகச் செயல்களையும் நாடக்கூடும் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும் என்பதாகும்” (முடிவுகள்: பக்கம் 33).
இந்த இடத்தில் என்னை ஒரு கருத்தினைக்கூற அனுமதியுங்கள். கொட்பிறே குணதிலகாவின் புத்திசாதுர்யமான விரிவான நுண்ணாய்வு மிக அழகாக அலட்சியம் செய்யப்படும். அயல்நாடு; உட்படலான வெளிநாட்டு செய்திப் பிரிவுகள், அதை கண்டுகொள்ளாது. ஊடகங்கள் அதை வெளியிடாது. சமூக ஊடகங்கள் அதை இருட்டடிப்புச் செய்யும். தூதுவர்கள் அதனைக் காணவோ அதன்பக்கம் தமது செவிகளைத் திருப்பவோ மாட்டார்கள். மேதைகள் அதை ஆராயவோ அல்லது வெறுமனே படித்துப் பார்க்கக்கூட மாட்டார்கள். ஆரவார மதக்கொள்கை உடையவர்கள் ஆனால் மனச்சுதந்திரம் குறைவானவர்கள் மற்றும் புத்திஜீவி என்கிற நிலையிலுள்ளவர்கள் போன்ற ஏனைய வெளிச்சங்கள் தொடர்ந்தும் ஒளிவட்டம் வீசுகிற மகான்களாகச் சித்தரிக்கப் படுவார்கள்.
இது ஏனென்றால் அரசியல் ரீதியாக அரச இறையாண்மைக்காக ஒரு போலித் தன்மையான நுட்பமான இகழ்ச்சியைக் ஏற்றுக் கொள்வது சரியானதாகும். அதேவேளை மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் நடத்தைகள் என்பனவற்றை நோக்கி காட்டும் வெறுப்பினை சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து வருவதும் அரசியல் ரீதியாகத் தவறானது. கொட்பிறியின் அத்தகைய ஒரு புறநிலைக் கண்ணோட்டத்தின்படி, மேற்கின் அர்த்தமற்ற காட்சியாக  சமீபகாலமாக இடம்பெற்று வரும் ஆட்சி மாற்றத் தூண்டுதலில் நாட்டங்கொண்ட சாத்தியமுள்ள சக்தியாகத் திகழும் எந்த ஒரு வாரிசுக்கோ அல்லது நாடு கடந்த அரசுக்கோ அதன் எண்ணம் ஈடேற உதவி கிடைக்காது. அது எந்த நிதியுதவியையோ அல்லது பலமான கரவொலியையோ பாதிக்கப்பட்ட தனி ஒருவருக்கு நிரந்தர உணர்வோடு செவிலித்தன்மை புரிந்துவரும் தமிழ் குடியேற்ற சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
கொட்பிறியின் எழுத்துக்கள் கருத்துபூர்வமாகவோ அல்லது உறுதியாகவோ நேரடி விமர்சனத்தில் ஈடுபடவில்லை ஏனெனில் அவை  தர்க்கரீதியாக வெல்ல முடியாத பலம் கொண்டவை மேலும் குடியியல் சமூகத்தின் விமர்சகர்கள் மட்டுமே போதுமானதாக இல்லை. அதை சிங்கள பௌத்த ஏகாதிபத்திய வாதம் அல்லது புதிய தாராண்மைவாத இராணுவவாதம் எனப் புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில் கொட்பிறி பௌத்தருமல்ல புதிய தாராண்மைவாதியுமில்லை. அதை ஆட்சியின் ஆதரவாளர் அல்லது அதற்கு ஆசைப்படும் ஒருவருடைய கருத்து என்று ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்கவும் முடியாது. ஏனெனில் கொட்பிறி அப்படியான ஒரு ஆதரவை ஒருபோதும் விரும்பியதுமில்லை, மற்றும் தனது 85வது வயதில அந்தப்பழக்கத்தை அவர் பின்பற்றுவார் என்று கற்பனை செய்வது கூடக் கடினம்.
முரண்பாடாக, மார்கா ஆய்வரங்கின் பிரதான பங்களிப்பாளரான கொட்பிறே குணதிலகா மற்றும் டேவிட் பிளாக்கர் (ஒரு யுத்த அனுபவஸ்தரும் ஆங்கில உரைநடைக்காகப் பரிசு பெற்ற எழுத்தாளர். இவர் சிங்கள பௌத்தரோ அல்லது  ஸ்ரீலங்கா அடையாளமாகிய அடிப்படைவாத எண்ணங்களைப் பின்பற்றுபவருமல்ல) என்பவரும் மட்டுமே தருஸ்மான் அறிக்கையைப்பற்றி மிகக் கடுமையான மற்றும் சிக்கலான விமர்சனங்களையும் மற்றும் போரின் இறுதிக் கட்டம் பற்றி நம்பிக்கையான திடமான பகுப்பாய்வையும், விளக்கமான மாற்றுக் கட்டமைப்பையும,; வேறு எந்த குறுகிய தேசியவாத சித்தாந்தங்களையோ அல்லது பேச்சாளர்களையோவிட சிறப்பாக செய்திருந்தனர்
தருஸ்மான் அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு  சட்டபூர்வமான நிலையைத் திரும்பவும் அடைவதற்கு கொட்பிறே குணதிலகா மற்றும் டேவிட் பிளாக்கர் ஆகியோரது மறைமுகமான விரிவாக்கல் மூலமான முக்கியமான தலையீடுகள் இருந்தன. இன்னும் கூறினால் மோசமான குற்றம் பரப்பும் சனல் - 4ன் தயாரிப்புகளில் கூட சூழலுக்கும் நிகழ்வுக்கும் ஏற்றதான ஒரு யதார்த்தமான மறு இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. உதாரணத்துக்கு டேவிட் பிளாக்கர் கூறுகிறார் “.....காட்சிகளில் அடையாளம் காணக்கூடிய ஸ்ரீலங்கா வீரர்களின் செய்கை அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அடையாளம் தெரியாத நபர்கள் வெளிப்படையாக குற்றச் செயல்கள் புரிவதையும் குற்றவியல் அல்லாத நடவடிக்கைகளின் காட்சியுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனால் உணர்த்தப்படடுள்ளது, அனைத்து செயல்களும் குற்றவியல் நடவடிக்கைகளே அவை அடையாளம் காணக்கூடிய ஸ்ரீலங்கா இராணுவப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்று” (‘தருஸ்மானின் பாதகாப்புத் துறையிலுள்ள ஓட்டைகள்’)
இவை அறிவுபூர்வமானதும் அனைத்தும் மிக மதிப்பு வாய்ந்ததும் மற்றும் புகழ்ச்சிக்கு உரியவையுமாகும், “ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்” எனும் தலைப்பில் பாரிய அழிவை உண்டாக்கும் ஆயுதத்தின் பாணியில் உள்ள சனல் - 4 ன் திட்டங்களைப்பற்றிய முக்கியமான ஒற்றை விமர்சனம் கூட இல்லாது அதேவேளை உண்மையில் பரபரப்பான அவர்களின் பிதற்றலை கிளிப்பேச்சுப் போல திருப்பிச் சொல்லியிருக்கும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ள எதிர் ஆவணப் படத்தின் (மினோலி ரத்னாயக்கா விவரணையுடன் வழங்கியிருப்பது) மீது கருத்துரையாளர்கள் தீர்ப்பு வழங்கும் சமயத்தில் இவை ஒரு சமயம் உதவக்கூடும்.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக